குப்பையில் வளரும் இந்த வண்டு BMW, Audi கார்களை விட விலை அதிகம்.. ஏன் தெரியுமா?
உலகிலேயே விலை உயர்ந்த வண்டு பற்றி தெரியுமா? இதன் விலையை கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள். அதற்கான காரணத்தையும் தெரிந்துகொள்ளுங்கள்.
உலகின் விலை உயர்ந்த வண்டு குப்பையில் வாழ்கிறது.. ஆனால் அதன் விலை BMW மற்றும் Audi கார்களின் விலையை விட அதிகம்.
பூமியில் பல விலங்குகள் மற்றும் பூச்சிகள் உள்ளன. அதில் சில உணவாக உண்ணப்படுகிறது. சில உயிருக்கு ஆபத்தானவை. ஆனால் ஒரு பூச்சிதான் உலகிலேயே விலை உயர்ந்தது. பல சொகுசு கார்களை விட இதன் விலை அதிகம்.
ரூ. 3 கோடிக்கு விற்கப்பட்ட வண்டு
குப்பையில் வசிக்கும் இந்த வண்டை ஜப்பான் நாட்டு வளர்ப்பாளர் இளநகை பணமதிப்பில் கிட்டத்தட்ட 3 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். எந்த காரணமும் இல்லாமல் இவ்வளவு பணம் கொடுத்து இந்த பூச்சியை வாங்க முடியாது.
Shutterstock
இந்த விலை உயர்ந்த வண்டுக்கு 'Stag beetle' என்று பெயர். லுகானிடே குடும்பத்தைச் சேர்ந்த இந்தப் பூச்சிகளில் உலகம் முழுவதும் 1200 இனங்கள் உள்ளன.
இந்த வண்டுகள் அழுகும் மரத்தை விரும்பி சாப்பிடுகின்றன. இந்த பூச்சி பழச்சாறு மற்றும் மரச்சாறுகளை சாப்பிட்டு சுமார் 7 ஆண்டுகள் வரை வாழ்கிறது.
இந்த வண்டுகளின் தலையில் 5 அங்குல நீளமான கருப்பு கொம்புகள் இருக்கும். அதனால் தான் Stag Beetle என்று அழைக்கப்படுகின்றன. Stag என்றால் மான் என்று பொருள். மான் போல கொம்புகள் இந்த வண்டுகளுக்கு இருக்கும். அவை அதிக வெப்பம் உள்ள பகுதிகளில் சுற்றித் திரிகின்றன.
Nationalpark Donau-Auen
Stag Beetle குளிரைத் தாங்க முடியாமல் சில சமயங்களில் இறக்கின்றன. இந்த வண்டு ஆபத்தான நோய்களுக்கு மருந்து தயாரிக்க பயன்படுகிறது. அதனால்தான் இவ்வளவு மதிப்புடையதாக இருக்கிறது. ஆனால் இந்த இனம் அழியும் அபாயத்தில் உள்ளது.
Reddit: r/Entomology
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Hirschkäfer, Insect costlier than luxury cars, Stag beetle, Stag beetle price, stag beetle mandibles