புர்ஜ் கலீஃபாவை விட உயரமான Battery-யை கட்டமைக்க முயற்சி.! பிரபல நிறுவனங்கள் ஒப்பந்தம்
உலகின் அடுத்த உயரமான கட்டிடம் 3,000 அடி உயர பேட்டரியாக (battery) இருக்க வாய்ப்பு உள்ளது.
ஏனெனில், மின்சாரத்தை சேமிப்பதில் உள்ள சவால்களை சமாளிக்க வானளாவிய பேட்டரிகளை உருவாக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
இவை உலகின் மிக உயரமான கட்டமைப்புகளாக மாறும் என கூறப்படுகிறது.
துபாயின் புர்ஜ் கலீஃபா (Burj Khalifa) மற்றும் நியூ யார்கின் One World Trade Center போன்ற கட்டிடங்களை வடிவமைத்த Skidmore, Owings & Merrill (SOM) மற்றும் மின் சேமிப்பு நிறுவனமான Energy Vault ஆகியவை இந்த வானளாவிய பேட்டரிகளை உருவாக்கும் நோக்கத்திற்காக ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இரண்டு நிறுவனங்களும் இணைந்து மிகப்பாரிய பேட்டரி தொகுதிகளுடன் வானளாவிய கட்டிடங்களை உருவாக்கும். அவற்றின் உயரம் 985 அடி முதல் 3,300 அடி வரை இருக்கும். என கூறப்படுகிறது.
இதுவரை உலகின் மிக உயரமான கட்டிடம் புர்ஜ் கலீஃபா ஆகும். இதன் உயரம் 2,717 அடி ஆகும்.
புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை சேமிப்பதும் இதில் அடங்கும். மின்சாரத்தின் தேவை அதிகரிக்கும் போது இந்த பேட்டரிகள் வழங்கப்படுகின்றன.
தேவை குறையும் போது உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் இவற்றில் சேமிக்கப்படும்.
எனர்ஜி வால்ட் ஏற்கனவே சீனாவில் 492 அடி உயர மின் சேமிப்பு அமைப்பை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |