8,000 ஆண்டுகள் பழமையான மதுபானம் கண்டுபிடிப்பு!
சீனாவில் 8,000 ஆண்டுகள் பழமையான மதுபான மண்பானை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள பெய்லிகாங் (Peiligang) கலாச்சார தளத்தில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 17) இந்த மண்பாண்டம் கண்டுபிடிக்கப்பட்டது.
Peiligang கலாச்சார தளத்தில் இரண்டு களிமண் பானைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதில் ஒரு பானையில் monascus hypha எனும் புளிக்கவைக்கப்பட்ட உணவுகளில் ஒரு வகை எச்சங்களும், மற்றோரு பானையில் cleistothecia எனும் ஒரு வகையான பழங்களில் காணப்படும் சில பூஞ்சைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இது 8,000 ஆண்டுகள் பழமையான களிமண் பானைகளில் கண்டுபிடிக்கப்பட்டன.
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, இந்த கண்டுபிடிப்பு 8,000 ஆண்டுகள் முன்பே மக்கள் மொனாஸ்கஸைப் (monascus) பயன்படுத்தி மதுபானங்களை பயன்படுத்தியதற்கான ஆரம்ப ஆதாரமாகும்.
சீன சமூக அறிவியல் அகாடமியின் தொல்லியல் கழகத்தின் உதவி ஆய்வாளர் லி யோங்கியாங் (Li Yongqiang), பழங்கால குடியேற்றத்தில் இருந்தவர்கள் மதுபானம் காய்ச்சுவதற்கும் சேமித்து வைப்பதற்கும் பானைகளைப் பயன்படுத்தினர் என்பதை இந்த கண்டுபிடிப்பு சுட்டிக்காட்டுகிறது என்று கூறினார்.
2017-ஆம் ஆண்டில், இதேபோன்ற மற்றொரு கலைப்பொருள் அதே ஹெனான் (Henan) மாகாணத்தில் உள்ள ஜியாஹு கற்கால (Jiahu Neolithic) கிராமத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது, அங்கு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கிமு 7000-க்கு முந்தைய மதுபானத்தின் பழமையான இரசாயன ஆதாரங்களைக் கண்டறிந்தனர்.