World's Rarest Passport: 500 பேர் மட்டுமே பயன்படுத்தும் உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்
உலகில் 500 பேரிடம் மட்டும் இருக்கும் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் முதன்முதலில் 1300ம் ஆண்டு வழங்கப்பட்டுள்ளது.
உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்
கிட்டத்தட்ட 194 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யும் ஜப்பான் நாட்டின் பாஸ்போர்ட் (passport) தான் உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டாக பார்க்கப்படுகிறது.
ஆனால் ஜப்பான் நாட்டு பாஸ்போர்ட்டை விட உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் ஒன்று உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா?
அதுதான், மால்டாவின் இறையாண்மை ராணுவ உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஆர்டர் ஆஃப் மால்டா பாஸ்போர்ட். சாவரின் மிலிட்டரி-யின் உறுப்பினர்களுக்கு என தனி நாடு, சாலைகள் இல்லாவிட்டாலும், அவர்களுக்கென கார் ஓட்டுநர் உரிமம், ஸ்டாம்ப், நாணயம் ஆகிய அனைத்தையும் கொண்டுள்ளனர்.
1300ம் ஆண்டு முதல் முதலாக இந்த ஆர்டர் ஆஃப் மால்டா என்ற பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது, இந்த பாஸ்போர்ட் மூலம் தூதர்கள் பல்வேறு உலக நாடுகளுக்கு சென்று தங்கள் ஆவணங்களை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
2ம் உலகப் போருக்கு பிறகு பல்வேறு நாடுகளின் சிறப்பம்சங்களை உள்ளடக்கிய உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டாக மாறியது. இந்த பாஸ்போர்ட்கள் உலகில் வெறும் 500 பேரிடம் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்டர் ஆஃப் மால்டா
இயேசு கிறிஸ்துவின் ரத்தத்தை பிரதிபலிப்பதாக அமைந்துள்ள இந்த பாஸ்போர்ட், இயேசுவின் இறையாண்மை தூதரக உறுப்பினர்கள், தலைவர்கள், அவர்களது குடும்பத்தினரிடம் மட்டுமே உள்ளது.
பாஸ்போர்ட்டில் நிறுவனத்தின் பெயர் தங்கத்தால் பொறிக்கப்பட்டுள்ளது, இந்த பாஸ்போர்ட்டை சுமார் 100 ஆண்டுகள் பயன்படுத்த முடியும், ஏனென்றால் இதன் உறுப்பினர்கள் வாழ்நாளில் இரண்டு முறை மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
இதன் உறுப்பினர்கள் 85வயதில் ஓய்வு பெற வேண்டும் என்ற விதி உள்ளது எனவும் சொல்லப்படுகிறது. மொத்தம் 44 பக்கங்கள் கொண்ட இந்த பாஸ்போர்ட்டின் பின்பக்கத்தில் மால்டீஸ்-ன் சிலுவை அச்சடிக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
World's rarest passport, world's powerful passport, only 500 people use this sovereign military order of malta passport, gold lettering passport, visa