உலகின் மிகச்சிறிய தவளையை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள்
வெறும் 30 மிமீ நீளமே வளரக்கூடிய உலகின் மிகச்சிறிய தவளை இனம் இந்தோனேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் Sulawesi பகுதியில் உலகின் மிகச்சிறிய தவளை இனத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த தவளை இனங்கள், Limnonectes இனத்தைச் சேர்ந்தவை. இவை தனித்துவமான இனப்பெருக்க நடத்தையை வெளிப்படுத்துகின்றன.
இந்த தவளைகள் தங்கள் முட்டைகளை நிலத்தில் இடுகின்றன, இது இந்தோனேசியாவில் உள்ள வேறு ஒரு இனத்திழும் காணப்படவில்லை.
Photo: PLOS ONE
சுலவேசியில் உள்ள ஆராய்ச்சிக் குழுவினர் தங்கள் களப்பணியின் போது இந்த சிறிய தவளைகளைக் கண்டுபிடித்தனர். புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த தவளை நம்பமுடியாத அளவிற்கு சிறியது, அதிகபட்ச நீளம் சுமார் 30 மிமீ ஆகும்.
சுலவேசியில் உள்ள சில தவளைகள் நிலத்தில் முட்டையிடுவதாக அறியப்பட்டாலும், இந்த சிறிய வகை லிம்னோனெக்டஸ் ஒரு சிறப்பு முறையைக் கொண்டுள்ளது.
பெண் தவளைகள் இடும் முட்டைகளை ஆண் தவளைகள் இலைகள் அல்லது பாசி படிந்த பாறைகளில், அதாவது சிறிய நீரோடைகள் மற்றும் குளங்களுக்கு மேல், ஒன்று முதல் இரண்டு மீட்டர் உயரம் வரை வைக்கின்றன.
இந்த நடத்தை இப்பகுதியில் உள்ள மற்ற தவளைகளிலிருந்து வேறுபட்டது. இந்த தவளைகள் L. arathooni என்ற மற்றொரு தவளை இனத்தை ஒத்தவை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
world's smallest frog species, Limnonectes species, L. arathooni frogs, Limnonectes frogs, Sulawesi, Indonesia, 30 millimeters frog