உலகிலேயே உயரமான பெண்ணும் குள்ளமான பெண்ணும்... கின்னஸ் உலக சாதனை நாளில் நிகழ்ந்த சந்திப்பு
கின்னஸ் உலக சாதனை நாளில், உலகிலேயே உயரமான பெண் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ள பெண்ணும், உலகிலேயே சிறிய உருவம் கொண்டவர் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ள பெண்ணும் சந்தித்துக்கொண்ட அசாதாரண சந்திப்பு ஒன்று நிகழ்ந்துள்ளது.
உலகிலேயே உயரமான பெண்ணும் குள்ளமான பெண்ணும்
துருக்கி நாட்டவரான Rumeysa Gelgi (27) என்னும் பெண்தான் உலகிலேயே உயரமான பெண் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறார்.
Rumeysaவின் உயரம், 215.16 சென்றிமீற்றர்கள், அதாவது, 7 அடி 1 அங்குலம்.
அதேபோல, இந்தியாவைச் சேர்ந்த Jyoti Amge (30), உலகிலேயே சிறிய உருவம் கொண்ட பெண் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறார்.
Jyotiயின் உயரம், 62.8 சென்றிமீற்றர்கள், அதாவது, 2 அடி 1அங்குலம்.
இந்நிலையில், 20ஆவது கின்னஸ் உலக சாதனை நாளில், Rumeysaவும் Jyotiயும் The Savoy hotel என்னும் உணவகத்தில் சந்தித்து தேநீர் அருந்தியபடி அளவளாவிகொண்டார்கள்.
இருவருக்கும் உயரத்தில் மிகப்பெரிய வித்தியசாம் என்பதால், என்னால் Jyotiயை முகத்துக்கு நேராகப் பார்த்து பேசமுடியவில்லை என்பதுதான் வருத்தம் என்கிறார் Rumeysa.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |