உலகில் எந்த விமான நிலையம் சிறந்தது தெரியுமா? வெளியான டாப் 10 பட்டியல்
உலகில் இந்த ஆண்டிற்கான சிறந்த 100 விமான நிலையங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
விமான நிலைய மதிப்பீட்டு நிறுவனமான Skytrax, உலக அளவில் பயணிகளின் திருப்தி போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் டாப் 100 விமானநிலையங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டிற்கான(2021) பட்டியல் வெளியாகியுள்ளது. அதில், கடந்த எட்டு ஆண்டுகளில் முதல் இடத்தில் இருந்து வந்த சிங்கப்பூர் விமான நிலையம் கீழே சென்றுள்ளது.
இதற்கு கொரோனாவும் ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. முதல் 10 இடங்களில் 7 விமான நிலையங்கள் ஆசிய கண்டத்தை சேர்ந்தவை. அதே சமயம் வட அமெரிக்க விமான நிலையங்கள் இதில் இடம் பிடிக்கவில்லை.
விமான நிலையத்தில் இருக்கும் செக்-இன், ஷாப்பிங், குடிவரவு, பாதுகாப்பு, விமானநிலையம் எந்த அளவிற்கு தூய்மையாக இருக்கிறது, சுற்றுப் புறம், உணவகங்கள், விமானநிலையத்தில் இருக்கும் ஊழியர்கள் பயணிகளிடம் எப்படி நடந்து கொள்கின்றனர், பார்கள் போன்ற பல காரணிகளை மையமாக கொண்டு இந்த பட்டியல் வெளியாகியுள்ளது.
அதில் மேலே குறிப்பிட்டுள்ள இந்த காரணங்கள் தான் மிக முக்கியமானவையாக பார்க்கப்படுகிறது. வழக்கம் போல் இந்த ஆண்டும் முதல் 20 இடங்களில் ஆசிய மற்றும் ஐரோப்பாவை சேர்ந்த விமானநிலையங்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளன.
அதில் டாப் 10-ல் ஆசிய விமான நிலையங்கள் 7 உள்ளன. இந்த 7 விமான நிலையங்களில் மூன்று ஜப்பானில் உள்ளது. ஐரோப்பாவை பொறுத்தவரை டாப் 10-ல் மூன்று விமான நிலையங்கள் மட்டுமே உள்ளன.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, இந்த ஆண்டு இரண்டு விமான நிலையங்கள் முன்னேறியுள்ளன. அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் விமான நிலையம் கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் ஐந்து இடங்களுக்குள் இருந்தது.
ஆனால் இந்த முறை 22-வது இடத்தை பிடித்துள்ளது. அதே போன்று வட அமெரிக்க விமான நிலையங்கள் எதுவும் டாப் 20-க்குள் வரவில்லை. வான்கூவர் சர்வதேச விமான நிலையம் கடந்த 2020-ஆம் ஆண்டு 13-வது இடத்தில் இருந்தது. தற்போது அது 24 வது இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளது.
டாப் 100 விமான நிலையங்களின் பட்டியலை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்....
முதல் 10 இடங்களில் இருக்கும் விமானநிலையங்களின் பட்டியல்
10. Hong Kong International Airport
9. Kansai International Airport
8. London’s Heathrow Airport
7. Zurich Airport
6. Munich International Airport
5. Tokyo’s Narita International Airport
4. Seoul’s Incheon International Airport
3. Singapore Changi Airport
2. Tokyo International Airport
1. Doha’s Hamad International Airport