உலகின் தலைசிறந்த 5 சக்திவாய்ந்த நாணயங்கள்: பிரிட்டிஷ் பவுண்டு பிடித்துள்ள இடம்?
உலகப் பொருளாதாரத்தில் நாணயங்கள் முக்கியமான இடத்தை வகிக்கின்றன. வெவ்வேறு நாடுகளுக்கிடையே வாணிப ஒப்பந்தங்களை நிர்ணயிப்பதில், நாட்டின் பொருளாதார நிலைத்தன்மையை பிரதிபலிப்பதில் இவை முக்கிய பங்காற்றுகின்றன.
உலகளாவிய பொருளாதாரத்தில் குறிப்பிட்ட நாணயத்தின் வலிமை அதன் பிரசித்தி அல்லது அதிக பயன்பாட்டிற்கு அடிப்படையாக அல்ல, மாறாக அதன் கொள்முதல் சக்தியைப் பொறுத்தே உள்ளது.
2024ஆம் ஆண்டின் சக்திவாய்ந்த நாணயங்கள் பற்றிய தகவலை Express.co.uk வெளியிட்டது.
இதில் பிரிட்டிஷ் பவுண்டு மற்றும் அமெரிக்க டொலர் முதலிடங்களில் இல்லை என்பது வெளிச்சத்துக்கு வந்தது.
5. பிரிட்டிஷ் பவுண்டு (British Pound)
சக்திவாய்ந்த நாணயங்களின் பட்டியலில் ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளது பிரிட்டிஷ் பவுண்டு.
1400ஆம் ஆண்டில் அறிமுகமான இந்நாணயம் 1971ஆம் ஆண்டு பத்து அடிப்படையிலான தகடுகளில் (decimalised) மாற்றப்பட்டது. பிரிட்டிஷ் பவுண்டு ஒரு சுதந்திர, மிதமான நாணயமாக விளங்குகிறது.
பிரிட்டனின் கிப்ரால்டர் பிரதேசம், இதேபோன்ற கிப்ரால்டர் பவுண்டு நாணயத்தை 1920களில் அறிமுகப்படுத்தியது, இது பிரிட்டிஷ் பவுண்டின் மதிப்புடன் இணைக்கப்பட்டுள்ளதால் (pegged) இதுவும் ஐந்தாம் இடத்தில் உள்ளது.
4. ஜோர்டானிய தினார் (Jordanian dinar)
உலகின் நான்காவது சக்திவாய்ந்த நாணயமாக ஜோர்டானிய தினார் கருதப்படுகிறது. ஒரு தினார் 1.07 பிரிட்டிஷ் பவுண்டுக்கு சமமாக இருக்கிறது.
1950களில் அறிமுகமான ஜோர்டானிய தினார், தெற்காசியாவின் ஜோர்டான் நாட்டின் முக்கிய வாணிகப்பொருளான எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதிகளால் வலுவடைந்துள்ளது.
அதனுடன், சுற்றுலா, வங்கி, மருந்து தயாரிப்பு துறைகளும் நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துகின்றன.
3. ஓமானிய ரியால் (Omani rial)
உலகின் மூன்றாவது சக்திவாய்ந்த நாணயமாக ஓமானிய ரியால் விளங்குகிறது.
ஓமான் செழித்தோன்றிய பொருளாதாரம் பெரும்பாலும் அதன் எண்ணெய் களஞ்சியங்களை நம்பியிருக்கிறது. 1970களில் ஓமானில் அறிமுகமான ரியால், ஒரு ரியால் 1.97 பிரிட்டிஷ் பவுண்டுக்கு சமமாக உள்ளது. 1 பவுண்டு, 0.51 ஓமானிய ரியாலுக்கு சமம்.
2. பஹ்ரைனி தினார் (Bahraini Dinar)
பஹ்ரைனின் தினார் உலகின் இரண்டாவது சக்திவாய்ந்த நாணயமாக உள்ளது.
1965ஆம் ஆண்டு அறிமுகமான இந்நாணயம், பஹ்ரைனின் எண்ணெய், எரிவாயு, நிதி மற்றும் சுற்றுலா துறைகளின் பலத்தால் முன்னணி நாணயமாக விளங்குகிறது. 1 பஹ்ரைனி தினார் 2.01 பிரிட்டிஷ் பவுண்டிற்கு சமம். 1 பவுண்டு, 0.50 பஹ்ரைனி தினாருக்கு சமம்.
1. குவைத்தி தினார் (Kuwaiti Dinar)
உலகின் சக்திவழிந்த நாணயங்களில் முதலிடத்தைப் பிடித்துள்ளது குவைத்தி தினார்.
ஒரு குவைத்தி தினார் 2.48 பிரிட்டிஷ் பவுண்டிற்கு சமமாக உள்ளது. 1 பவுண்டு, 0.40 குவைத்தி தினாருக்கு சமம்.
இந்த நாணயங்கள் அனைத்தும் தங்கள் நாடுகளின் பொருளாதார திடத்தன்மை மற்றும் கொள்முதல் சக்தியை பிரதிபலிக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
world's top five strongest currencies, Kuwaiti Dinar, Bahraini Dinar, Omani rial, Jordanian dinar, British Pound