இன்னுமா அதே பாஸ்வேர்டு யூஸ் பண்றீங்க? 12345.. password-னு.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்
உலகில் இன்னும் பெரும்பாலான ஊழியர்கள் 123456.., password என பலவீனமான பாஸ்வேர்டுகளை தான் பயன்படுத்துகிறார்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பாஸ்வேர்டு உலகம்
இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொருவரும் தொழில்நுட்பத்தை பயன்படுத்திக்கொண்டே இருக்கிறோம். பாதுகாப்புக்காக எல்லாவற்றிலும் பாஸ்வேர்டு பயன்படுத்துகிறோம்.
இமெயில், ஸ்மார்ட் போன், அதிலுள்ள ஆப்கள், சமூக வலைதளங்கள், இணையவழி வங்கிச் சேவைகள் என எண்ணற்ற இடங்களில் பாஸ்வேர்டு பயன்படுத்துகிறோம்.
பலவீனமான பாஸ்வேர்டுகள்
வங்கி கணக்காக இருந்தாலும் சமூக உடைக்க கணக்காக இருந்தாலும் சரி, நம் எல்லா கணக்குகளையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள பலமான பாஸ்வேர்டுகளை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. ஆனால், நோர்ட்பாஸ் என்னும் நிறுவனம் நடத்திய ஆய்வில் பெரும்பாலும் ஊழியர்கள் பலவீனமான பாஸ்வேர்டுகளை தான் பயன்படுத்துகிறார்கள் என தெரியவந்துள்ளது.
சாமானிய மக்கள் மட்டுமல்ல, வணிக ரீதியிலான கணக்குகளிலும் கூட இதுபோன்ற பலவீனமான பாஸ்வேர்டு தான் பயன்பாட்டில் இருக்கிறதாம். அதிலும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பயன்படுத்துகின்ற பாஸ்வேர்டுகள் படுமோசம். அவர்கள் பெரும்பாலும் ‘123456’ என வரிசை எண்களையும் அல்லது ’Password’’ என்ற சொற்களையே பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.
Nordpass நடத்திய ஆய்வு
உலகின் 31 நாடுகளில், மிகப் பாரிய அளவிலான நிறுவனங்களைச் சேர்ந்த பணியாளர்கள் என்ன பாஸ்வேர்டு பயன்படுத்துகின்றனர் என்று Nordpass என்னும் நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்தத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த ஆய்வில் அதிர்ச்சிக்குரிய விடயம் என்னவென்றால் ஒரு 20 பாஸ்வேர்டுகள் தான் பெரும்பாலும் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
123456789, 123456, password, password1, abc123, unknown, 12345, myspace1, god, 123456a போன்ற பாஸ்வேர்டுகள் தான் அதிகமாக பயன்படுத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தொலைத்தொடர்பு துறையில் உள்ள பணியாளர்கள் ‘Babygirl1’ மற்றும் ‘princess1’ போன்ற பாஸ்வேர்டுகளைப் பயன்படுத்துவைத்து தெரியவந்துள்ளது.
வாடிக்கையாளர் சேவைப் பிரிவு, ரியல் எஸ்டேட் துறை, எரிசக்தி துறை என எல்லா துறைகளிலும் இதே நிலை தான் என Nordpass ஆய்வில் தெரியவந்துள்ளது. பெரும்பாலான ஊழியர்கள் குறிப்பிட்ட சில சொற்களையே பயன்படுத்துகின்றனர்.
இதில் இந்தியர்கள் இன்னும் மோசம்!
பொது பயன்பாட்டில் உலக அளவில் முதல் இடத்தில் 123456 என்ற பாஸ்வேர்டு தான் அதிகம் பயன்படுத்துகின்றனர்.
இது என்ன பிரமாதம், பெசல் ஐட்டம் ஒன்னு இருக்கு என்பது போல, இந்தியாவில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆய்விலும் சரி, இந்த ஆண்டும் சரி, password என்கிற சொல்லைத் தான் இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தீய பாஸ்வேர்டு என்று தெரிய வந்துள்ளது.
Source: Computersnationwide.com
இதுபோக, அகராதியில் உள்ள வார்த்தைகள், தனிநபர்கள் அல்லது பிரபலங்களின் பெயர்கள், ஒரே சீரான வரிசை கொண்ட எண்கள், பிரபல இடங்கள் போன்றவை எல்லாம் பாஸ்வேர்டு பட்டியலில் முதன்மையான இடத்தை பிடித்திருக்கின்றன.
அதேபோல, உலகின் பணக்கார நிறுவனங்களைச் சேர்ந்த பணியாளர்கள் தனித்த பாணி ஒன்றை கையாளுகின்றனர். அது ஒன்றும் அவ்வளவு பாரிய ரகசியம் கிடையாது. தங்கள் நிறுவனத்தின் பெயருடன் 123 அல்லது ABC போன்ற பொதுவான சொற்களை சேர்த்து பாஸ்வேர்டாக பயன்படுத்துகின்றனர்.
Password, Strong Password, Indians, Worldwide Password
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |