கொரோனாவின் பிடியில் சிக்கியிருக்கும் உலகின் குடுமி! 100 மில்லியனைக் கடந்த பாதிப்பு
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்னிக்கை 100 மில்லியனைக் கடந்துள்ளள்ளது.
2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் முதல் முறையாக சீனாவின் வூஹான் நகரில் கொரோனா வைரஸின் பாதிப்பு கண்டறியப்பட்டது.
பின்னர் அது 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி, உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் வளர்ந்த நாடுகள் கூட அதன் பொருளாதாரத்தில் பெரும் வீழ்ச்சியைக் கண்டுள்ளன.
இந்நிலையில், செவ்வாய்கிழமை மாலை வரை உலகளவில் பெருந்தோற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 100 மில்லியனைக் கடந்து 100,770,000-க்கும் அதிகாமாக பதிவாகியுள்ளது.
மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 2.2 மில்லியனை எட்டியுள்ளது.
மிக அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் முதல் 5 இடங்களில் அமேரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா மற்றும் பிரித்தானியா இடம் பெற்றுள்ளன.
இதில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவை விட, அமேரிக்கா 2.5 மடங்கு அதிகமாக பாதிக்கப்பட்டு எண்ணிக்கையில் 25.5 மில்லியன் தொற்றுக்களை பதிவு செய்துள்ளது.
பல நாடுகளில் கொரோனாவுக்கு எதிரான துப்பூசிகலாய் தனங்கள் மக்களுக்கு செலுத்திவருகிறது. இருப்பின்னும் கொரோனா வைரஸ் உலகில் குறைந்தது 4 முதல் 5 ஆண்டுகள் தாக்கத்தை நிலைப்படுத்தும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.