முல்லைத்தீவில் உணவகம் ஒன்றில் வாங்கிய உணவில் புழுக்கள்: அதிகாரிகள் எச்சரிக்கை
இலங்கையில் உணவகம் ஒன்றில் வாங்கப்பட்ட உணவில் புழுக்கள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உணவு பொதியில் புழுக்கள்
முல்லைத்தீவின் உடையார்கட்டு பகுதியில் அமைந்துள்ள பிரபலமான உணவகமொன்றில் செவ்வாய்க்கிழமையன்று வாங்கப்பட்ட உணவுப் பொதியில் புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

உணவகம் அமைந்துள்ள அதே பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் மதிய சாப்பாட்டிற்காக குறித்த உணவகத்தில் இருந்து ஐந்து பார்சல் உணவுகளை வாங்கி சென்றுள்ளார்.
சாப்பிடுவதற்காக பார்சலை திறந்த போது, மீன் பொரியல் உணவிற்குள் புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
பின்னர் சம்பந்தப்பட்ட நபர் உடனடியாக சுகாதார பரிசோதகருக்கு தகவல் வழங்கினார்.
புகாரின் போரில் உணவகத்தில் சோதனை நடத்திய அதிகாரிகள் உணவகத்தை பரிசோதித்து, சுகாதார விதிமுறைகளை மீறியதாக கண்டறிந்துள்ளனர்.

நீதிமன்ற வழக்கு
இந்நிலையில் சம்பந்தப்பட்ட உணவகம் மீது சுகாதார பிரிவினர் வழக்கு தாக்கல் செய்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், உணவின் தரத்தை பேணுவதில் அலட்சியம் காட்டும் உணவகங்கள் மீதான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |