சுவிட்சர்லாந்தில் ஒரே நாளில் எக்கச்சக்கமாக அதிகரித்த கொரோனா தொற்று: கவலையை ஏற்படுத்தியுள்ள விடயம்
சுவிஸ் பெடரல் அலுவலகத்தின் சமீபத்தைய தரவுகள் கொரோனா தொற்று பயங்கரமாக அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளன.
அதுவும், ஒரே நாளில் 40 சதவிகிதம் அளவுக்கு கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், 93 பேர் புதிதாக கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள், 10 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்கள்.
நாட்டின் கிழக்குப் பகுதியிலுள்ள மாகாணங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆகவே, ஆஸ்திரியா நாட்டில் தடுப்பூசி பெறாதவர்களுக்காக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதைப்போல, சுவிட்சர்லாந்திலும் அறிவிக்கப்படலாம் என்ற ஒரு அச்சம் உருவாகியுள்ளது.
ஏழு நாட்களில் 100,000 பேரில் எத்தனை பேருக்குக் கொரோனா தொற்று என்பதைக் கணக்கிடும் எண்ணிக்கை சுவிட்சர்லாந்தில் 528ஆகியுள்ளது. அது கடந்த வாரத்தில் 360ஆக இருந்தது.
பிரான்சில் அந்த எண்ணிக்கை 181ஆகவும், இத்தாலியில் 150ஆகவும் உள்ளது.
ஆனால், ஆஸ்திரியாவிலோ அது 1,537ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. .