கடனை தீர்க்கும் காலபைரவர் வழிபாடு.., எப்படி தெரியுமா?
கடன் பிரச்சனை என்பது சிலருக்கு இருக்கும் ஒரு பெரிய பிரச்சனை.
நாம் எவ்வளவுதான் பணம் சம்பாதித்தாலும் ஏதேனும் ஒரு சமயத்தில் கடன் வாங்கவேண்டிய நிலை ஏற்படும்.
சிலர் எவ்வளவு முயன்றாலும், எவ்வளவு சம்பாதித்தாலும் கடனை அடைக்க முடியாமல், கடன் பிரச்சனையுடன் போராடிக் கொண்டிருப்பார்கள்.
அதன்படி, காலபைரவர் என்பது சிவபெருமானின் மிகவும் சக்தி வாய்ந்த உக்கிர மற்றும் ருத்ர வடிவங்களில் ஒன்றாகும்.
இவர் பிரம்மனின் அகந்தையை அழிக்க சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றியவர்.
காலத்தை நிர்வகிப்பவராகவும், மரணத்தின் போது ஜீவனுக்கான கர்ம வினைகளைக் களைப்பவராகவும் கருதப்படுகிறார்.
பொதுவாக அனைத்து சிவன் கோவில்களின் வடகிழக்கு (ஈசான்ய) மூலையில் தனி சன்னதியில் காட்சி தருவார்.
அந்தவகையில், கடன் தொல்லைகள் முழுமையாக நீங்க காலபைரவரை எப்படி வழிபடுவது என்று இக்காணொளியில் பாலாறு சுவாமிகள் பகிர்ந்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |