நடுவானில் திடீரென மாயமான விமானம்! காட்டில் சிதறி கிடந்த பாகங்கள்... என்ன ஆனது? வெளியான முக்கிய தகவல்
ரஷ்யாவில் மாயமான விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதன்கிழமை 6 பேருடன் பயணித்த AN-26 விமானம் Khabarovsk நகரத்திலிருந்து 38 கி.மீ தொலைவில் ரேடாரிலிருந்து மாயமானது.
விமானம் அதன் தகவல் தொடர்பு சாதனங்களை சோதனை செய்துக்கொண்டிருந்த போது மாயமானதாக முதற்கட்ட அறிக்கைகள் சுட்டிக்காட்டின.
இந்நிலையில், Korfovsky-யில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் பாதுகாக்கப்பட்ட காட்டுப்பகுதியில் மாயமான விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.
விமானத்தின் பாகங்கள் ஸ்பார்டக் பனிச்சறுக்கு தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
காலநிலை சற்று மேம்பட்டு வருவதால், Mi-8தேடுதல் மற்றும் மீட்பு ஹெலிகாப்டர் தரையிறங்க திட்டமிட்டுள்ளது, மீட்பு குழுவினர் தரையிறங்க தளத்தைத் தேடி வருகிறார்கள் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசமான காலநிலையே இந்த விபத்திற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.
எனினும், மின் பிரச்சனைகள் காரணமாக கூட விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் குறிப்பிடுகின்றன.
விமானத்தில் பயணித்தவர்களின் நிலை குறித்து தற்போது வரை எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.