செய்யாத குற்றத்துக்கு 36 ஆண்டுகள் தண்டனை., 400 கோடி இழப்பீடு
செய்யாத குற்றத்திற்காக 36 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த மூவருக்கு பெரும் தொகை இழப்பீடாக வழங்கப்படும் என கூறப்படுகிறது.
அமெரிக்காவில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 36 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட மூவருக்கு அரசாங்கம் 48 மில்லியன் டொலர்கள் (சுமார் ரூ. 400 கோடி) இழப்பீடாக வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இழப்பீடானது மேரிலாந்தில் இதுபோன்ற ஒரு சந்தர்ப்பத்தில் வழங்கப்படும் மிகப்பெரிய தொகையாகும்.
ஆல்ஃபிரட் செஸ்ட்நட், ரான்சம் வாட்கின்ஸ் மற்றும் ஆண்ட்ரூ ஸ்டீவர்ட் ஆகியோருக்கு 1983-ல் ஒரு கொலை வழக்கில் பொலிஸார் கைது செய்யும் போது 16 வயது. இதை எதிர்த்து மீண்டும் மேல்முறையீடு செய்தனர்.
அப்போது அவர்களின் வழக்கை விசாரித்த அதிகாரிகள் நேரடி மற்றும் உடல் ஆதாரங்களை புறக்கணித்ததாக குற்றம் சாட்டியது மட்டுமல்லாமல், அதை நிரூபித்த பிறகு, 2019-ல் அவர்களை விடுவிக்கவும் உத்தரவிடப்பட்டது.
இவர்கள் மூன்று பேரும் 14 வயது சிறுவன் ஒருவனை சுட்டுக் கொன்ற இளைஞர்கள் என்று தவறாக குற்றம் சாட்டப்பட்டவர்கள். அவர்களில் ஒருவர் பொது பதிவு கோரிக்கையை (public records request) சமர்ப்பித்த பிறகு அவர்களின் வழக்கு மறுபரிசீலனை செய்யப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |