அசுர ஆட்டம் ஆடி சதம் விளாசிய இலங்கை கேப்டன்! நியூசிலாந்தை அடித்து நொறுக்கிய பெண் சிங்கங்கள்
மகளிர் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இலங்கை அணி 9 வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நியூசிலாந்து 170 ஓட்டங்கள்
ஒருநாள் போட்டி 28 ஓவர்களாக குறைக்கப்பட்ட நிலையில் நியூசிலாந்து அணி முதலில் ஆடியது. அந்த அணி 5 விக்கெட் இழப்புக்கு 170 ஓட்டங்கள் குவித்தது.
அதிகபட்சமாக மெலி கெர் 40 ஓட்டங்களும், மேடி கிரீன் 39 ஓட்டங்களும் எடுத்தனர். சுகந்திகா, கவிஷா மற்றும் இனொக தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
??? Chamari Athapaththu scores her 7th ODI century and leads Sri Lanka to a record-breaking win! ??#SLvNZ #LionessRoar pic.twitter.com/NCyXt3u9kS
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) June 27, 2023
சமரி அதப்பத்து சதம்
அதன் பின்னர் களமிறங்கிய இலங்கை அணியில் கேப்டன் சமரி அதப்பத்து ருத்ர தாண்டவம் ஆடினார். அவர் ஆட்டமிழக்காமல் 83 பந்துகளில் 5 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 108 ஓட்டங்கள் குவித்தார்.
விஷ்மி 74 பந்துகளில் 50 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் இலங்கை அணி 27 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 172 ஓட்டங்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
?????? Vishmi Gunaratne hits her maiden ODI fifty runs ? in an exceptional partnership with Chamari Athapaththu.#SLvNZ #LionessRoar pic.twitter.com/I8tWgraDqL
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) June 27, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |