இங்கிலாந்தில் இரண்டாம் உலகப்போர்க்கால வெடிகுண்டு கண்டுபிடிப்பு: 1200 வீடுகளில் வாழ்வோர் வெளியேற்றம்
இங்கிலாந்தில், இரண்டாம் உலகப்போர்க்கால வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 1200 வீடுகளில் வாழ்வோர் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
இரண்டாம் உலகப்போர்க்கால வெடிகுண்டு கண்டுபிடிப்பு
இங்கிலாந்திலுள்ள Plymouth நகரில், கட்டுமானப்பணிக்காக பள்ளம் தோண்டும்போது, இரண்டாம் உலகப்போர்க்கால வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
அது 250 கிலோ எடையுள்ள ஜேர்மன் வெடிகுண்டு ஆகும்.

பொதுவாக இதுபோன்று கண்டுபிடிக்கப்படும் வெடிகுண்டுகள் வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பான முறையில் செயலிழக்கச் செய்யப்படுவது வழக்கம்.
ஆனால், இந்த வெடிகுண்டை அது இருக்கும் இடத்திலிருந்து அகற்றினால் வெடித்துவிடும் ஒரு அபாயம் இருப்பது தெரியவந்தது.
ஆகவே, அந்த பகுதியில் இருக்கும் சுமார் 1,200 வீடுகளில் வாழும் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்..
பெருமளவில் அந்த வெடிகுண்டைச் சுற்றி மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு, அதை பாதுகாப்பாக வெடிக்கச் செய்யும் முயற்சிகளை வெடிகுண்டு நிபுணர்கள் துவக்கியுள்ளார்கள்.
இரண்டாம் உலகப்போரின்போது Plymouth நகர் சரமாரியாக குண்டு வீசித் தாக்கப்பட்டது. ஆக, இதுபோல் பள்ளம் தோண்டும்போது, அவ்வப்போது வெடிக்காத குண்டுகள் அங்கு கண்டுபிடிக்கப்படுவதுண்டு.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |