இரண்டாம் உலகப்போரில் உயிர் பிழைத்தவர் தற்போது இல்லை: ஹிட்லரால் முடியாததை செய்த காட்டிய புடின்
இரண்டாம் உலகப்போரில் பலமுறை உயிர் பிழைத்த போரிஸ் ரோமன்சென்கோ(96) கடந்த வாரம் கார்க்கிவ் பகுதியில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் கொடூரமாக உயிரிழந்துள்ளார்.
உக்ரைனின் இரண்டாவது மிகப்பெரிய நகரான கார்க்கிவ்-வில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த வாரம் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டாம் உலக போரில் பலமுறை உயிர் பிழைத்த போரிஸ் ரோமன்சென்கோ(96) கொடூரமாக உயிரிழந்துள்ளார்.
கடந்த 1942ம் ஆண்டு டோர்ட்முண்ட் பகுதிக்கு கட்டாய பணியாளராக கடத்தப்பட்ட இவர், அங்கிருந்து தப்பிக்கும் முயற்சியில் தோல்வி அடைந்து இரண்டாம் உலகப்போரில் நாஜி படைக்குழு நடத்திய புச்சென்வால்ட் வதை முகாமிற்கு 1943ல் மாற்றப்பட்டார்.
“He's a former prisoner of Nazi camps.”
— Bloomberg Quicktake (@Quicktake) March 22, 2022
96-year-old Holocaust survivor Boris Romanchenko was killed when his home in Kharkiv was attacked, said Ukraine’s President Zelenskiy. He said Russian forces hit the Zhytomyr region as well https://t.co/gwykC6DAtv pic.twitter.com/p1RIIXoNCC
பின்னர் அவர் பால்டிக் கடல் தீவான யூஸ்டோமில் உள்ள பீனெமுண்டேவுக்கு அனுப்பப்பட்ட அவர் டோரா-மிட்டல்பாவ் வதை முகாம் மற்றும் பெர்கன்-பெல்சன் முகாம் ஆகியவற்றிக்கு மாற்றப்பட்டார்.
இந்த வதைமுகாம்களில் கிட்டத்தட்ட 53,000 நபர்கள் வரை கொல்லப்பட்டு இருந்த போதிலும் அவற்றில் இருந்து உயிர்ப்பிழைத்த போரிஸ் ரோமன்சென்கோ(96) தற்போது ரஷ்யா நடத்திவரும் விதிமுறைகள் அற்ற போர்த்தாக்குதலில் கொடூரமாக உயிரிழந்து இருப்பதாக புச்சென்வால்ட் வதை முகாமில் இருந்து உயிர் பிழைத்தவர்கள் சங்கம் திங்கள் கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, தயவுசெய்து கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் அவர் எத்தனை விஷயங்களைச் சந்தித்து இருக்கிறார் என, ஆனால் அவர் தற்போது ரஷ்யா நடத்திவரும் வரம்புமீறிய தாக்குதலில் உயிரிழந்துள்ளார் என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, இதற்கு கருத்து தெரிவித்துள்ள உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சர், ஹிட்லர் செய்ய முடியாததை தற்போது புதின் செய்து முடித்துவிட்டார் என ட்விட்டர் பதிவிட்டுள்ளார்.
மேலும் இவர் டோரா சர்வதேச குழுவின் துணை தலைவராக பணியாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.