தனது 100ஆவது வயதில் 100 வாழ்த்துக்கள் கிடைக்கவேண்டும் என ஆசைப்பட்ட நபருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி
தனது 100ஆவது வயதில் தனக்கு 100 வாழ்த்துக்களாவது கிடைக்காதா என்ற ஆசையில் இருந்தார், இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற வீரர் ஒருவர்.
ஆனால், மக்களோ அவர் எதிர்பார்க்காத அளவில் அவருக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளார்கள்.
இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய மக்கள்
தனது 18ஆவது வயதில் இரண்டாம் உலகப்போரில் பங்கேற்றார் கேஸ்டன் (Gaston Pettigrew) என்னும் கடற்படை வீரர்.
தற்போது கனடாவின் கியூபெக்கில் வாழும் கேஸ்டன், ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி தனது 100ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய நிலையில், தனது 100ஆவது பிறந்தநாளுக்கு தனக்கு 100 வாழ்த்துக்களாவது கிடைக்கவேண்டும் என ஆசைப்பட்டார் அவர்.
அவரது நண்பர் ஒருவர் அவரது ஆசையை சமூக ஊடகம் ஒன்றில் வெளிப்படுத்த, கேஸ்டனுடைய 100ஆவது பிறந்தநாளன்று, 100 அல்ல, 1,700க்கும் அதிகமான வாழ்த்து அட்டைகளை அனுப்பி கேஸ்டனுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளார்கள் உலகமெங்கும் உள்ள மக்கள்.
கேஸ்டனுடைய பிறந்தநாளுக்கு முந்தைய இரவு, நிகழ்ச்சி ஒன்றில் அவரிடம் அவருக்கு அனுப்பப்பட்ட வாழ்த்து அட்டைகள் அடங்கிய பெரிய பெட்டி ஒன்று கையளிக்கப்பட்டது.
அதில் 1,700க்கும் அதிகமான வழ்த்து அட்டைகள் இருக்கவே, மனம் குளிர்ந்து மகிழ்ச்சியில் ஆழ்ந்துவிட்டார் கேஸ்டன்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |