அதிகரித்துவரும் மூன்றாம் உலகப்போர் அச்சம்: சர்ச்சைக்குரிய ஆயுதம் வாங்க 725 மில்லியன் கொடுக்கும் அமெரிக்கா
ரஷ்ய உக்ரைன் போரில், மேற்கத்திய நாடுகள் வழங்கியுள்ள ஆயுதங்கள் மூலம் ரஷ்யாவை உக்ரைன் தாக்கத் துவங்கியுள்ளதால், மூன்றாம் உலகப்போர் அச்சம் அதிகரித்துவருகிறது.
இப்படிப்பட்ட ஒரு சூழலில், சர்ச்சைக்குரிய ஆயுதம் ஒன்றை வாங்க, உக்ரைனுக்கு 725 மில்லியன் டொலர்கள் வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
சர்ச்சைக்குரிய ஆயுதம் வாங்க 725 மில்லியன்
புடின் எவ்வளவு எச்சரித்தும் கேட்காமல், தான் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறும் முன் உக்ரைனுக்கு தன்னாலான உதவிகளைச் செய்துவிடுவது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் முடிவு செய்துவிட்டார் போலிருக்கிறது.
ஏற்கனவே அமெரிக்கா வழங்கியுள்ள நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளைக்கொண்டு ரஷ்யாவுக்குள் தாக்குதல் நடத்த அமெரிக்கா அனுமதியளித்துள்ளதால் புடின் கொந்தளித்துக்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதுபோல, சர்ச்சைக்குரிய ஆயுதம் ஒன்றை வாங்க உதவுவதற்காக, உக்ரைனுக்கு 725 மில்லியன் டொலர்கள் வழங்க ஜோ பைடன் முடிவு செய்துள்ளார்.
அது என்ன ஆயுதம்?
அந்த சர்ச்சைக்குரிய ஆயுதம், கண்ணிவெடிகள் அல்லது கண்ணிவெடிகள்!
ஆம், உக்ரைன் நீண்ட நாட்களாக அமெரிக்காவிடம் இந்த கண்ணிவெடிகளைக் கேட்டுக்கொண்டிருந்த நிலையில், தற்போது அவற்றைக் கொடுக்க ஜோ பைடன் முடிவு செய்துள்ளார்.
விடயம் என்னவென்றால், வெடிகுண்டுகள், ஏவுகணைகள் முதலான ஆயுதங்கள், ஒரு குறிப்பிட்ட இலக்கைக் குறிவைத்துத் தாக்கும்.
ஆனால், கண்ணிவெடிகளோ, தவறுதலாக கால் வைத்தால் பொதுமக்கள் உயிரைப் பறிக்கும் அபாயம் உள்ளவை என்பதாலேயே அவை சர்ச்சைக்குரிய ஆயுதங்களாக கருதப்படுகின்றன.
என்றாலும், இந்த குறிப்பிட்ட கண்ணிவெடிகள், முன்கூட்டியே குறிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட நேரம் வரை மட்டுமே இயங்கும் என்றும், அதன் பின் தானாகவே அணைந்துவிடும் என்றும், அதனால் பொதுமக்களுக்கு ஆபத்தில்லை என்றும் கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |