மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரித்தானியாவில் எது பாதுகாப்பான மற்றும் மிக ஆபத்தான பகுதி
ரஷ்யாவால் மீண்டும் மூன்றாம் உலகப் போர் அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், பிரித்தானியாவின் குறிப்பிட்ட இடங்களில் அணுகுண்டுகள் வீசப்பட்டால் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்படும் என்பது தொடர்பான தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
பாதுகாப்பான பகுதி
ரஷ்யாவுக்கு எதிராக பிரித்தானியாவும் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகளும் தங்கள் ஏவுகணைகளை பயன்படுத்திக்கொள்ள இறுதியில் அனுமதி அளித்துள்ளது.
பிரித்தானியாவின் Storm Shadow ஏவுகணையால் ரஷ்யாவின் இன்னொரு மூத்த இராணுவ தளபதியும் கொத்தாக 500 வடகொரிய வீரர்களும் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையிலேயே விளாடிமிர் புடினால் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தப்பட்டால், பிரித்தானியாவில் பாதுகாப்பான பகுதி மற்றும் மிக ஆபத்தான பகுதி தொடர்பில் நிபுணர்கள் தரப்பு பதிவு செய்துள்ளனர்.
வெளியான தகவல்களின் அடிப்படையில் பிரித்தானியாவில் 38 நகரங்கல் மற்றும் கிராமங்கள் அணு ஆயுத இலக்குகளாக அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
தலைநகரான லண்டன் எப்போதும் விளாடிமிர் புடினின் முதன்மையான இலக்காக இருக்கலாம் என்றே கூறுகின்றனர். மட்டுமின்றி, இரண்டாம் உலகப்போர் காலகட்டத்திலும் லண்டன் நகரம் தாக்கப்பட்டுள்ளது.
தற்போது லண்டனில் 8.8 மில்லியன் மக்கள் வசித்து வருகின்றனர். அதாவது நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 13 சதவிகிதத்தினர் லண்டனில் வசிக்கின்றனர். இந்த நிலையில், லண்டனின் மத்தியப் பகுதியில் அணுகுண்டு வீசப்பட்டால் அது பக்கிங்ஹாம் அரண்மனை அருகே, Trafalgar சதுக்கத்தில் விழ வாய்ப்புள்ளதாகவே குறிப்பிடுகின்றனர்.
[
மேலும், லண்டனை இலக்கு வைத்துள்ள புடின் Tsar Bomba என்ற மிக ஆபத்தான, சோவியத் ஒன்றியத்தால் இதுவரை வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய வெடிகுண்டை பயன்படுத்தலாம் என்றே அஞ்சப்படுகிறது.
அனைவரும் உடனடியாக
மேலும், Tsar Bomba வெடிகுண்டை ரஷ்யா இதுவரை பயன்படுத்தியதும் இல்லை என்றே கூறபப்டுகிறது. க்ண்டு வீசப்பட்ட அடுத்த நொடி, அப்பகுதி முழுவதும் ஆவியாகிவிடும். அத்துடன் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைவரும் உடனடியாக இறந்துவிடுவார்கள்.
Trafalgar சதுக்கத்தில் குண்டு விழும் என்றால், 6.71 கி.மீ சுற்றுவட்டாரத்திற்கு மொத்தமாக அழிந்துவிடும். அதாவது Clapham, Brixton, Kilburn, Camden Town, Islington மற்றும் Hackney பகுதிகள் மிச்சமிருக்காது.
வெஸ்ட்மின்ஸ்டர் மொத்தமாக சிதையும். லண்டனின் சின்னச் சின்ன சின்னங்கள் அனைத்தும் மொத்தமாக சேதமாகும். லண்டனை அடுத்து 2,812,000 மக்கள் வசிக்கும் மான்செஸ்டர் பகுதியை புடின் இலக்கு வைக்க வாய்ப்புள்ளது.
கார்டிஃப் பகுதியில் குண்டு வீசப்பட்டால், மொத்தமாக குறைந்தது 700,000 பேர் உடனடி மரண அபாயத்தில் உள்ளனர். அத்துடன் சுமார் 600,000 பேர்கள் வசிக்கும் ஸ்காட்லாந்தின் மிகப்பெரிய நகரமான கிளாஸ்கோவும் புடினின் இலக்காக இருக்க வாய்ப்புள்ளது.
1970களில் ரஷ்யாவின் இலக்குகளாக மத்திய லண்டன், எடின்பர்க், டீஸைட், லீசெஸ்டர், மான்செஸ்டர், லிவர்பூல், கிளாஸ்கோ, ஹல், யார்க், டோவர், கேம்பிரிட்ஜ், மெய்ட்ஸ்டோன், ஹடர்ஸ்ஃபீல்ட், வால்வர்ஹாம்ப்டன், கோவென்ட்ரி மற்றும் ஷெஃபீல்ட் ஆகிய பகுதிகள் இருந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |