மூன்றாம் உலகப்போரில் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு இறக்கலாம்... பிரபலம் ஒருவரின் தீர்க்கதரிசனம்
ரஷ்ய ஜனாதிபதி புடினால் மூன்றாம் உலகப் போர் உருவாகலாம் என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில், மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் அழிந்து போவார்கள் என்று பிரபலமான ஆயர் ஒருவர் தீர்க்கதரிசனம் உரைத்துள்ளார்.
கடும் எச்சரிக்கை
சிட்னியைச் சேர்ந்த மார் மாரி இம்மானுவேல் என்ற ஆயரே தமது சமூக ஊடக பக்கத்தில் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மனிதகுலம் எதிர்கொள்ள வேண்டிய மிக மோசமான காலகட்டமாக இது இருக்கும் என அவர் பதிவு செய்துள்ளார்.
மேலும், அணு ஆயுதப் போராக இது வெடிக்க இருப்பதால், மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு இறக்கலாம் என்றார். எஞ்சிய இரு பங்கு மக்கள், தாங்கள் பிறக்காமலே இருந்திருக்கலாம் என அவதிப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கண்டிப்பாக பயன்படுத்தவே
மொத்த நிலப்பரப்பும் வெப்பத்தால் தகிக்கும், அதில் மக்கள் நிலை பரிதாபமாக இருக்கும் என்றார். அணு ஆயுதங்களை உருவாக்கி வைத்திருக்கும் நாடுகள், அதை காட்சிப் பொருளாக கருதவில்லை என்றும், கண்டிப்பாக ஒருநாள் அதைப் பயன்படுத்தவே பல கோடிகள் செலவிட்டு உருவாக்கியுள்ளதாகவும் மார் மாரி இம்மானுவேல் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க நிர்வாகம் எப்போதும் இல்லாமல் முதல் முறையாக மக்கள் தப்பித்துக்கொள்வதற்கான வழிமுறைகளை வெளியிட்ட நிலையிலேயே மார் மாரி இம்மானுவேல் தமது தீர்க்கதரிசனத்தை உரைத்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |