லண்டன் பூங்காவில் 170-க்கும் மேற்பட்ட வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு: சிறுவர்கள் பூங்காவில் பரபரப்பு
லண்டன் சிறுவர் பூங்காவில் இரண்டாம் உலகப் போர் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லண்டன் பூங்காவில் வெடிகுண்டுகள்
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஒரு சிறுவர் பூங்காவை விரிவாக்கம் செய்ய அரசாங்கம் முடிவு செய்தது.
இதற்காக கடந்த மாதம் பூங்காவில் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றது. அப்போது அங்கு எதிர்பாராத விதமாக ஒரு வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் மோப்ப நாய் உதவியுடன் விரிவான சோதனை நடத்தினர்.
சோதனையில் கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டு இரண்டாம் உலகப் போர் காலத்தில் பதுக்கி வைக்கப்பட்ட ஒன்று என்பது தெரியவந்தது.
170க்கும் மேற்பட்ட வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு
இதையடுத்து பூங்காவின் மற்ற இடங்களிலும் வெடிகுண்டுகள் இருக்க வாய்ப்புள்ளதால், தோண்டும் பணியை விரிவுபடுத்த அதிகாரிகள் முடிவு செய்தனர்.
கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வரும் இந்த ஆய்வில் இதுவரை 170-க்கும் மேற்பட்ட வெடிக்காத குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் மொத்த எடை சுமார் 500 கிலோ ஆகும்.
தற்போது வெடிகுண்டு நிபுணர்கள் அவற்றை செயலிழக்கச் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிறுவர் பூங்காவில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பூங்கா விரிவாக்க பணியை அரசாங்கம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |