கோஹ்லி என்னை திருமணம் செய்து கொள்! இப்படி அவரிடம் முன்னர் கேட்ட பெண்ணை நினைவிருக்கா?
இந்திய அணி தலைவர் விராட் கோஹ்லி உலகளவில் உள்ள பிரபலமான நட்சத்திர கிரிக்கெட் வீரர்களின் முதன்மையானவர்.
அவருக்கு உலக அளவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. அவரது ஆளுமை மற்றும் இயல்பான குணத்தினால் அவருக்கு கிரிக்கெட் களத்தில் மட்டுமல்ல, உலகெங்கிலும் கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களாக இருக்கிறார்கள். அதில் பல ரசிகைகளும் இருக்கின்றனர்.
இங்கிலாந்தின் நட்சத்திர வீராங்கனை டேனியல் வியாட் (Danielle Wyatt) வெளிப்படையாக கோஹ்லியை பற்றி முன்னர் சொன்னது பிரபலமானது.
கோஹ்லி என்னை திருமணம் செய்து கொள்! என அவர் போட்ட டுவீட் ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.
உலகின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனைகளில் ஒருவரான வியாட்டின் விருப்பத்திற்கு கோஹ்லி எந்த பதிலும் கொடுக்கவில்லை.
பின்னர் பாலிவுட் நட்சத்திரம் அனுஷ்கா ஷர்மாவை 2017ல் கோஹ்லி திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.