சீனாவின் ஜனாதிபதியாக ஜி ஜின்பிங் மூன்றாவது முறையாக தெரிவு! தலையைப் புதைத்துக் கொண்டு உழைக்க வேண்டும் என பேச்சு
ரகசிய வாக்கெடுப்பில் வெற்றி பெற்று சீனாவின் ஜனாதிபதியான ஜின்பிங்
மாவோவுக்கு பிறகு அதிக காலம் சீன ஜனாபதியாக இருக்கும் ஜி ஜின்பிங்
ஜி ஜின்பிங் ரகசிய வாக்கெடுப்பின் மூலம் சீனாவின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும். இதில் கட்சியின் பொதுச்செயலாளராக தெரிவு செய்யப்படுபவரே ஜனாதிபதி வேட்பாளராகவும் இருப்பார்.
Reuters
அந்த வகையில் ஒரு வார காலமாக தலைநகர் பீஜிங்கில் நடந்த மாநாட்டில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் ஜின்பிங் ஜனாதிபதியாக தெரிவானார்.
இதன்மூலம் சீனாவில் மாவோவுக்கு பிறகு அதிக காலம் ஜனாதிபதியாக இருப்பவர் என்ற பெருமையை ஜின்பிங் பெறுகிறார். அதாவது, ஜின்பிங் இன்னும் ஐந்து ஆண்டுகள் பதவியில் நீடிக்க உள்ளார்.
Bloomberg