141 உயிர்களை பலி கொண்ட குஜராத் பால விபத்துக்கு இரங்கல் தெரிவித்த சீன ஜனாதிபதி
இந்திய பிரதமருக்கும், ஜனாதிபதிக்கும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இரங்கல் செய்தி அனுப்பியுள்ளார்
குஜராத் பாலம் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் - ஜி ஜின்பிங்
இந்திய மாநிலம் குஜராத்தில் தொங்கு பாலம் அறுந்த கோர விபத்துக்கு சீன ஜனாதிபதி ஜி ஜின் பிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் மோர்பி நகரில் 100 ஆண்டுகள் பழமையான தொங்கு பாலம் மறுசீரமைப்புக்கு பின் திறக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான மக்கள் பாலத்தில் குவிந்ததில் ஏற்பட்ட கோர விபத்தில் 141 பேர் பலியாகினர்.
மேலும் 170 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். ஆற்றுக்குள் சிலர் விழுந்திருக்கலாம் என்று அஞ்சப்படுவதால், மீட்புப் படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் குஜராத் துயர சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆகியோருக்கு ஜி ஜின்பிங் அனுப்பியுள்ள இரங்கல் செய்தியில்,
'சீன அரசாங்கம் மற்றும் சீன மக்கள் சார்பாக, குஜராத் பாலம் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன் அவர்களது குடும்பத்தினருக்கும், காயமடைந்தவர்களுக்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.
Reuters Photos