புடினுக்கு இல்லை.,ட்ரம்பை நேரில் வரவேற்ற சீன ஜனாதிபதி
Xi jinping greets trump personally on runway: முத்தரப்புக் கூட்டத்திற்காக சீனா வந்தடைந்த ட்ரம்பை, ஜனாதிபதி ஷி ஜின்பிங் நேரில் வரவேற்றார்.
சீனாவில் நடைபெற உள்ள முத்தரப்புக் கூட்டத்திற்காக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வந்தடைந்தபோது ஷி ஜின்பிங் நேரில் வரவேற்றார்.
ட்ரம்ப் - ஜின்பிங்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீனாவின் ஷி ஜின்பிங் ஆகியோர் கலந்துகொள்ளும் முத்தரப்பு கூட்டம் சீனாவில் நடைபெற உள்ளது.
ஷென்சென்னில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் பங்கேற்க, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) சீனா வந்தடைந்தார்.
ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் இருந்து தரையிறங்கிய அவரை, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் (Xi Jinping) நேரில் வரவேற்றார். ட்ரம்ப் அவருக்கு வணக்கம் செலுத்த, தலைவர்கள் இருவரும் கைகுலுக்கிக் கொண்டனர்.

புடினை வரவேற்கவில்லை
முன்னதாக, விளாடிமிர் புடின் (Vladimir Putin) புதன்கிழமை சீனா வந்தடைந்தார். அவருடன் நீண்டகால நட்பு இருந்தபோதிலும் ஜின்பிங் அவரை விமான நிலையத்தில் வரவேற்கவில்லை.
இதற்கிடையில், அணு ஆயுதங்களைக் கட்டுப்படுத்துவது மற்றும் ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக் கொண்டுவருவது குறித்து, ஷி ஜின்பிங் மற்றும் புடினுடன் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்தார்.
