சீன ஜனாதிபதியை சந்தித்த ட்ரம்ப்..ஈரான் போர் குறித்து பேசியதென்ன?
சீனா சென்றுள்ள டொனால்ட் ட்ரம்ப் அந்நாட்டு ஜனாதிபதி ஜி ஜின்பிங் உடன் ஈரான் போர் குறித்து விவாதித்துள்ளார்.
ஈரானில் நிலவும் போர்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனாவின் பெய்ஜிங்கில் ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை (Xi Jinping) சந்தித்தார்.

இருநாட்டு தலைவர்களும் முக்கிய விவகாரங்களான வர்த்தகம், தைவானுடனான அமெரிக்காவின் உறவுகள் மற்றும் ஈரானில் நிலவும் போர் உள்ளிட்டவை குறித்து விவாதித்ததாக தெரிய வந்துள்ளது.
ட்ரம்ப்புடன் சென்றுள்ள வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ, ஈரானில் நிலவும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் சீனா இன்னும் தீவிரமான பங்கை வகிக்க வேண்டும் என்று அமெரிக்கா எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
தீவிரமான பங்கை வகிக்குமாறு
அவர், "ஈரான் தற்போது செய்துவரும் மற்றும் பாரசீக வளைகுடா பகுதியில் செய்ய முயன்றுவரும் நடவடிக்கைகளில் இருந்து அவர்கள் பின்வாங்க செய்வதில், சீனா இன்னும் தீவிரமான பங்கை வகிக்குமாறு அவர்களை இணங்க வைக்க நாங்கள் நம்புகிறோம்" என்றார்.
பேச்சுவார்தைகளின்போது, அமெரிக்க வணிக நிர்வாகிகளின் பிரதிநிதிக் குழுவிடம் பேசிய சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், "வெளி உலகிற்கான சீனாவின் வாயில்கள் மேலும் மேலும் விரிவாகத் திறக்கும்... அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் இன்னும் பிரகாசமான வாய்ப்புகளைப் பெறும்" என்று கூறியதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |