ரஷ்யாவில் 2ஆம் உலகப்போர் முடிவின் நிகழ்வு: கலந்துகொள்ள ஒப்புக்கொண்ட ஜி ஜின்பிங்
மாஸ்கோவில் நடைபெற உள்ள 80வது வெற்றி ஆண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்க ஜி ஜின்பிங் கலந்துகொள்கிறார்.
வெற்றி தின கொண்டாட்டம்
மே 9ஆம் திகதி ரஷ்யாவின் மாஸ்கோ நகரில், இரண்டாம் உலகப் போரின் முடிவின் 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வெற்றி தின கொண்டாட்டம் நடைபெற உள்ளது.
இதில் கலந்து சீனா, ஸ்லோவாகியா, செர்பியா, பாலஸ்தீனம், பிரேசில் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிற்கு இதற்காக அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், அதனை அவர் ஏற்றுக் கொண்டதாகவும் கிரெம்ளின் தெரிவித்துள்ளது.
மாஸ்கோவிற்கு பயணம்
இதுகுறித்து செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கொவ் கூறுகையில், "இத்தகைய தொடர்புகள் மற்றும் வருகைகள் தயாராகி வருகின்றன. மேலும் இந்த திகதிகளின் அடையாளத்திற்கு நாங்கள் மிகுந்த பரஸ்பர முக்கியத்துவத்தை வழங்குகிறோம்.
முக்கிய வரலாற்று நிகழ்வுகள், நாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் நமது நாடுகளின் பங்களிப்புகள் மற்றும் நமது இருதரப்பு உறவுகளின் நிலை ஆகியவற்றை நினைவூட்டுவதாக அவை செயல்படுகின்றன. இந்த ஈடுபாடுகள் தற்போது தீவிரமாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன" என்றார்.
மேலும், செப்டம்பர் மாத தொடக்கத்தில் விளாடிமிர் புடின் சீன ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்ததாகவும் அவர் கூறினார்.
ஜி ஜின்பிங் கடைசியாக மார்ச் 2023யில் மூன்று நாள் பயணமாக மாஸ்கோவிற்கு பயணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |