டிரம்ப் - ஜி ஜின்பிங் உரையாடல்: 2026-ல் அமெரிக்கா செல்லும் சீன ஜனாதிபதி
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் - அமெரிக்க ஜனாதிபதி டொனால் டிரம்ப் இடையிலான புதிய சந்திப்புகள் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
டிரம்ப் - ஜி ஜின்பிங் சந்திப்பு
திங்கட்கிழமை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தன்னுடைய ட்ரூத் சோஷியல் பக்கத்தில் வெளியிட்ட அறிவிப்பில், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் உடனான தொலைபேசி உரையாடலை குறிப்பிட்டுள்ளார்.
இந்த தொலைபேசி அழைப்பின் போது இரு நாட்டு தலைவர்களும் 2026ம் ஆண்டு பரஸ்பர உயர்மட்ட சந்திப்புக்கு ஒப்புக் கொண்டுள்ளனர்.

இது குறித்து டிரம்ப் வெளியிட்ட தகவலில், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் 2026ம் ஆண்டு ஏப்ரலில் தன்னை பெய்ஜிங்கிற்கு வருகை தர வேண்டி அழைப்பு விடுத்ததாகவும், மேலும் 2026 ஆண்டின் பிற்பகுதியில் அமெரிக்காவுக்கு அரசு முறை பயணமாக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் வர வேண்டும் என தான் அழைப்பு விடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இது இருநாட்டு உறவுகள் இடையே முக்கியத்துவத்தை ஏற்படுத்துவதுடன், இது தனக்கு மிகுந்த எதிர்பார்ப்பை அளித்து இருப்பதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தொலைபேசி அழைப்பில் முக்கிய விவாதம்
இரு நாட்டு தலைவர்கள் இடையிலும் மேற்கொள்ளப்பட்ட இந்த தொலைபேசி அழைப்பில், இருநாட்டு நலன்கள் மட்டுமின்றி உக்ரைன் விவகாரம், பென்டானில் கட்டுப்பாடு, அமெரிக்காவின் விவசாய பொருட்களை அதிக அளவில் வாங்குதல் சீனா ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் கொரியாவில் டிரம்ப் - ஜி ஜின்பிங் சந்தித்து கொண்டதை அடுத்து, தற்போது இரு நாட்டு தலைவர்கள் இடையில் மீண்டும் இந்த உரையாடல் நடைபெற்றுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |