Tesla-விற்கு போட்டியாக Xiaomi-யின் முதல் electric SUV YU7 அறிமுகம்
Tesla Model Y-க்கு போட்டியாக Xiaomi நிறுவனம் அதன் முதல் electric SUV காரை அறிமுகம் செய்துள்ளது.
சீன தொழில்நுட்ப நிறுவனமான Xiaomi தனது முதல் மின்சார எஸ்யூவி YU7-ஐ சர்வதேச சந்தையில் வெளியிட்டுள்ளது.
இது நிறுவனத்தின் இரண்டாவது மின்சார கார் ஆகும், இது Xiaomi SU7 செடானை அடிப்படையாகக் கொண்டது.
YU7 முழு சார்ஜில் 830 கிமீ ஓடும் என்றும், மணிக்கு 253 கிமீ வேகம் செல்லும் என்றும் நிறுவனம் கூறுகிறது.
இந்த மின்சார எஸ்யூவி ஜூலை 2025-க்குள் சீன சந்தையில் விற்பனைக்கு கிடைக்கும் என்று நிறுவனம் கூறுகிறது.
சியோமி இதை முதல் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு சீன சந்தையில் விற்பனை செய்யும்.
இதையடுத்து அது ஏற்றுமதி செய்யப்பட்டு மற்ற நாடுகளுக்கு விற்பனை செய்யப்படும். இது Tesla Model Y-உடன் போட்டியிடும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Xiaomi YU7 SUV, Tesla’s Model Y