பட்ஜெட் விலையில் அசத்தலான Poco X6 Pro ஸ்மார்ட்போன்: சிறப்பம்சங்கள் மற்றும் விலை
பட்ஜெட் விலையில் சியோமி நிறுவனத்தின் துணை பிராண்டான Poco இந்தியாவில் தனது புதிய ஸ்மார்ட்போனை களமிறக்கியுள்ளது.
புதிய ஸ்மார்ட்போன்கள்
சியோமி (Xiaomi) நிறுவனத்தின் துணை பிராண்டான Poco தன்னுடைய Poco X6 மற்றும் Poco X6 Pro என்ற இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்கியுள்ளது.
போக்கோ-வின் நடுத்தர X-series மாடலானது செயல்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்து வடிவமைக்கப்பட்டுள்ளது.
Poco X6 Pro ஸ்மார்ட்போன் தான் HyperOS மென்பொருளுடன் இந்தியாவில் சியோமி நிறுவனத்தால் விற்பனைக்கு சந்தைப்படுத்தப்படும் முதல் ஸ்மார்ட்போன்.
மேலும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் அம்சத்துடன் நிறுவனத்தில் இருந்து வெளியான முதல் ஸ்மார்ட்போன்.
சிறப்பம்சங்கள்
2024 ஜனவரி 12ம் திகதி முதல் விற்பனைக்கு வந்துள்ள Poco X6 Pro ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14(Android 14) மற்றும் ஹைப்பர் ஓ.எஸ்(HyperOS) அம்சத்துடன் வெளியாகியுள்ளது.
Mediatek Dimensity 8300 Ultra சிப்செட், Octa-core 3.35 GHz செயல்திறன் கொடுக்கப்பட்டுள்ளது.
256GB 8GB RAM, 256GB 12GB RAM, 512GB 12GB RAM ஆகிய 3 வேரியண்ட்டுகளில் Poco X6 Pro ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது.
பின்பக்க பிரதான கேமரா 64 MP, f/1.7, 25mm (wide), 8 MP, f/2.2, 120˚ (ultrawide), 2 MP, f/2.4, (macro) என 3 கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
16 MP, f/2.4, (wide) உடன் முன்பக்க செல்பி கேமரா வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
USB Type-C 2.0, 67W சார்ஜிங் வசதியுடன் 5000 mAh பேட்டரி திறன் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த Poco X6 Pro ஸ்மார்ட்போனின் விலை ரூ. 24,999 மற்றும் ரூ. 26,999 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |