ரோபோக்களை உருவாக்கும் ரோபோக்கள் - சீனாவில் வியக்கவைக்கும் புதிய தொழிற்சாலை
XPeng robots build robots in China factory: சீனாவில் ரோபோக்களே ரோபோக்களை உருவாக்கும் புதிய தொழிற்சாலை வியக்கவைக்கிறது.
தானியங்கி உற்பத்தி வரிசை
சீனாவின் மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான XPeng தனது புதிய முயற்சியால் உலக கவனத்தை ஈர்த்துள்ளது.
குவாங்சோவில் நிறுவப்பட்ட புதிய தொழிற்சாலையில், IRON humanoid robot-ஐ உருவாக்கும் முழுமையான தானியங்கி உற்பத்தி வரிசை (Production Line) தொடங்கப்பட்டுள்ளது.
We made it!
— XPENG (@XPENG_Global) September 8, 2026
XPENG launches the world’s first automated production line for advanced general‑purpose humanoid robots.
The world’s first advanced general‑purpose humanoid robot has completed automated production and autonomously walks off the line.$XPEV pic.twitter.com/ayEiFFgO5p
இந்த தொழிற்சாலையில், சுமார் 80 சதவீதம் முக்கிய செயல்முறைகள் தானியங்கி (automated) முறையில் நடைபெறுகின்றன. XPeng வெளியிட்ட வீடியோவில், தயாரிக்கப்பட்ட முதல் IRON ரோபோட், மனிதர்களின் உதவியின்றி தானாகவே உற்பத்தி வரிசையிலிருந்து வெளியே நடந்து சென்றது. இந்த காட்சி சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்தது.
XPeng-ன் நோக்கம், ரோபோக்களை உருவாக்குவதில் மட்டுமல்லாமல், பெரிய அளவில் ரோபோக்களை உற்பத்தி செய்யக்கூடிய தொழிற்சாலை அமைப்பை உருவாக்குவது.
முழுமையாக இல்லை
இருப்பினும், முழுமையாக ரோபோக்கள் மட்டுமே உற்பத்தி செய்கின்றன என்ற நிலைமை இல்லை. மனிதர்கள், இயந்திரங்கள் மற்றும் தானியங்கி அமைப்புகள் இணைந்து செயல்படுகின்றன.

XPeng, இதை உலகின் முதல் மேம்பட்ட பொதுப் பயன்பாட்டு humanoid ரோபோக்களுக்கு தானியங்கி உற்பத்தி வரிசை என விவரித்துள்ளது.
இந்த முன்னேற்றம், எதிர்காலத்தில் ரோபோட்கள் உற்பத்தி துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். தொழில்துறை, மருத்துவம், சேவை துறைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் humanoid ரோபோட்கள் பரவலாக பயன்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |