2027 ஆம் ஆண்டில்... சீனாவின் நாஸ்ட்ராடாமஸ் வெளியிட்ட 5 பயங்கரமான கணிப்புகள்
China’s Nostradamus makes 5 grim predictions: சீனாவின் நாஸ்ட்ராடமஸ் 5 மோசமான கணிப்புகளை வெளியிட்டுள்ளார்.
சீனாவின் நாஸ்ட்ராடமஸ் என்று அழைக்கப்படும் ஒருவர், 2027-ஆம் ஆண்டில் அமெரிக்கா எதிர்கொள்ளக்கூடிய ஐந்து மிகவும் மோசமான கணிப்புகளை வெளியிட்டுள்ளார்.
உள்நாட்டுப் போர்
கட்டாய இராணுவச் சேவை மற்றும் நாடு தழுவிய போராட்டங்கள் ஆகியவை உட்பட, முழுமையான பொருளாதாரச் சரிவையும் அவர் கணித்துள்ளார்.
இஸ்ரேலின் அழுத்தத்தால் ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுக்கும் என பல மாதங்களுக்கு முன்னரே கணித்திருந்த ஜியாங் சுவேகின், ட்ரம்ப் மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்புக்கு வருவார் என்று 2024 மே மாதம் கணித்திருந்தார்.

மட்டுமின்றி, ஈரான் போரில் அமெரிக்கா பின்னடைவை எதிர்கொள்ளும் என்றும், அவர்களால் ஈரானை வெல்ல முடியாது என்றும் ஜியாங் சுவேகின் தமது கணிப்புகளை வெளியிட்டிருந்தார்.
தற்போது, 2027-ஆம் ஆண்டில் அமெரிக்கா எதிர்கொள்ளக்கூடிய ஐந்து மிகவும் மோசமான கணிப்புகளையும் அவர் வெளியிட்டுள்ளார். 2027-ஆம் ஆண்டில் அமெரிக்காவில் உள்நாட்டுப் போருக்கான அனைத்துக் கூறுகளும் அமையக்கூடும் என்று ஜியாங் சுவேகின் (Jiang Xueqin) கருதுகிறார்.
இருப்பினும், நாட்டின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இரண்டு எதிரெதிர் படைகள் மோதிக்கொள்ளும் என்று தான் கணிக்கவில்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
சீன-கனடியக் கல்வியாளரான ஜியாங் சுவேகின், அமெரிக்கக் குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத் துறைக்கு (இது ICE என்று பரவலாக அறியப்படுகிறது) ஜனாதிபதி ட்ரம்ப் வரும் வருடத்தில் கூடுதல் அதிகாரங்களை வழங்குவார் என்று கணிக்கிறார்.
குடியேற்றச் சட்டங்களை அமுல்படுத்துவதற்குப் பொறுப்பான இந்த ஃபெடரல் முகமை, ட்ரம்ப் நிர்வாகம் மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைகளில் முக்கியப் பங்காற்றியுள்ளது.
பொருளாதார நெருக்கடி மற்றும் கட்டாய இராணுவச் சேவைக்கான ஆயத்த நடவடிக்கையாக, அமெரிக்காவின் அனைத்து முக்கிய நகரங்களிலும் தேசியப் பாதுகாப்புப் படை களமிறக்கப்படலாம் என்றும் சுவேகின் கருதுகிறார்.
கட்டாய ஆட்சேர்ப்பு
2027ல் அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள், கலவரங்கள் மற்றும் அமைதியின்மை ஏற்படும் என சிவேகின் கணித்துள்ளார். அமெரிக்காவில் உள்நாட்டுப் போருக்கான அனைத்துக் கூறுகளும் அமையக்கூடும் என்றும் அவர் கருதுகிறார்.
ட்ரம்ப் நிர்வாகம் 2027-ஆம் ஆண்டில் தேசிய இராணுவக் கட்டாய ஆட்சேர்ப்புக்கான கட்டமைப்பை உருவாக்கும் என்பதே அவருடைய மூன்றாவது கணிப்பாகும்.
ஈரானுடனான தொடரும் மற்றும் தீவிரமடைந்து வரும் மோதலுக்குப் படைகளை அனுப்புவதற்காக இது அறிமுகப்படுத்தப்படும் என்று சுவேகின் நம்புகிறார்.
பொருளாதார நெருக்கடிகளாலும் குண்டு வீச்சுகளாலும் ஈரானை வெல்ல முடியாத சூழலில், தரைப்படையினரை அமெரிக்கா பயன்படுத்தவுள்ளது என்றே சிவேகின் கணிக்கிறார். இதற்குத் தேசிய அளவில் கட்டாய இராணுவச் சேவை முறை தேவைப்படும்.

18 வயதுடைய இளைஞர்கள் கூட இதில் கட்டாயமாகச் சேர்க்கப்படுவார்கள் என சுவேகின் குறிப்பிடுகிறார். மேலும், தேசிய கட்டாய ராணுவச் சேவைக்கான சட்டத்தை ட்ரம்ப் நிர்வாகம் ஏற்கனவே இயற்றியிருக்கலாம், அல்லது குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் ஏற்கனவே ஆட்கள் அதில் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்றார்.
அவரது மற்றொரு கணிப்பு, 2026 நவம்பரில் நடைபெறவுள்ள அமெரிக்க இடைக்காலத் தேர்தல் தொடர்பானது; இத்தேர்தல் நாடாளுமன்றத்தின் கட்டுப்பாட்டைத் தீர்மானிக்கவுள்ளன. இதில் பல ஆச்சரியங்கள் இருக்கும் என்றும், முடிவு மக்கள் எதிர்பார்ப்பது போல அமையாது என்றும் அவர் நம்புகிறார்.

2027-ஆம் ஆண்டிற்கான அவரது இறுதி எச்சரிக்கை என்னவென்றால், ஈரானுடனான நீண்டகால போர் அமெரிக்கப் பொருளாதாரத்தை முற்றிலுமாகச் சீர்குலைக்கக்கூடும்; இதன் விளைவுகள் அமெரிக்காவையும் தாண்டி பல நாடுகளின் பொருளாதாரங்களைப் பாதிக்கும்.
ஈரானில் பல ஆண்டுகளுக்குத் தரைப்படையினரை ஈடுபடுத்துவது குறிப்பாகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் கருதுகிறார்.
அமெரிக்கா தரைப்படையுடன் ஈரானுக்குள் நுழைந்து, நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு அதில் ஈடுபட நேர்ந்து, அந்தப் போரில் தோல்வியடைந்தால், அது அமெரிக்கப் பொருளாதாரத்தின் முழுமையான சரிவுக்கே வழிவகுக்கும் என்கிறார் கல்வியாளரான சுவேகின்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |