பிரித்தானியாவுக்குள் ஊடுருவிய “ஜாம்பி மருந்து” நிபுணர்கள் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை
ஜாம்பி மருந்து (zombie drug) அல்லது ட்ராங்க்(Tranq) என்று அழைக்கப்படும் கால்நடை மயக்க மருத்து பிரித்தானியாவுக்குள் நுழைந்து இருப்பதாக நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
Xylazine மயக்க மருந்து
அமெரிக்க நகரங்களில் பெரும் தொல்லை கொடுத்த சட்டவிரோதமான மற்றும் சக்தி வாய்ந்த கால்நடை மயக்க மருந்தான Xylazine, பிரித்தானிய நகரங்களிலும் நுழைந்து இருப்பதாக அறிக்கைகள் எச்சரிக்கை தெரிவித்துள்ளன.
இந்த சட்டவிரோதமான மருந்தை பயன்படுத்தியவர்களுக்கு ஏற்பட்ட விளைவுகளை கொண்டு இந்த Xylazine மருந்து ஜாம்பி மருந்து (zombie drug) அல்லது ட்ராங்க்(Tranq) என்று அழைக்கப்படுகிறது.
இதன் தீவிர தன்மை கருதி “நாட்டின் வளர்ந்து வரும் ஆபத்து” என்று வெள்ளை மாளிகை எச்சரிக்கை விடுத்து இருந்தது.
இந்த மருந்து பெரும்பாலும் heroin அல்லது fentanyl போன்ற போதைப் பொருட்களுடன் கலந்து பயன்படுத்தப்படுகிறது, இது கணிக்க முடியாத மற்றும் மிகவும் ஆபத்தான கலவையை உருவாக்குகிறது.
ஆனால், இந்த பிரச்சனை ஓப்பியாய்டு(opioid) பயன்படுத்துபவர்களை மட்டும் பாதிக்கவில்லை. சமீபத்திய ஆய்வுகளில் போலி பரிந்துரை மருந்துகள், THC வேப் புகைப்பான் மற்றும் கோகைன் ஆகியவற்றிலும் சைலாசின் கண்டறியப்பட்டுள்ளது.
இதனால், இந்த ஆபத்தான விளைவுகளுக்கு ஆளாகும் மக்கள் தொகை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
சைலாசின்(Xylazine) ஏன் கவலைக்குரியது?
அதிகரித்த உயிரிழப்பு அபாயம்: சைலாசின் பயன்படுத்தியவர் மயக்கத்தில் இருந்து மீண்டெழுந்த பிறகு கூட, சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்தும். இது தீவிர உடல்நல பிரச்சனைகள் மற்றும் இறப்புக்கும் வழிவகுக்கும்.
கடுமையான பக்க விளைவுகள்: சைலாசின் பயன்படுத்துவதால் தோலில் புண் ஏற்பட்டு, அவை தொற்றுவதற்கும், கை, கால்கள் பாதிக்கப்பட்டு அவற்றை நீக்க வேண்டிய நிலைக்கும் வழிவகுக்கும்.
உடலில் சேரும் அபாயம்: ஓப்பியோய்டு அல்லாத போதைப்பொருட்களில் சைலாசின் இருப்பது, தாங்கள் உட்கொள்ளும் பொருட்களின் உள்ளடக்கத்தை அறியாதவர்கள் தற்செயலாக பாதிக்கப்படும் அபாயத்தை உருவாக்குகிறது.
பிரித்தானியாவில் வளர்ந்து வரும் பொது சுகாதார பிரச்சனை
பிரித்தானியாவில் இதன் தீவிர தன்மை வளர்ந்து வருவதாக நிபுணர்கள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.
ஆராய்ச்சியாளர்கள் 35 சைலாசின்(Xylazine) வழக்குகளை இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, மற்றும் வேல்ஸ் ஆகிய பகுதிகளில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் இறுதியில் கண்டறிந்துள்ளனர். வடக்கு அயர்லாந்தில் எந்தவொரு வழக்குகளும் இல்லை.
வெளியான நச்சுயியல் ஆய்வகங்களின் மாதிரி புள்ளிவிவரங்களில், இந்த மருந்து உயிரிழந்த 11 பேர் உட்பட 16 நபரிடம் கண்டறியப்பட்டுள்ளது.
பிரிட்டனில் நிலவரம், ஐக்கிய மாகாணங்களில் ஏற்கனவே கவலைக்குரிய விடயமாக கருதப்படும் சைலாசின் பரவலை பிரதிபலிக்கிறது. விரைவில் பொது சுகாதார பிரச்சனையாக மாறிவிடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
xylazine UK,
tranq drug UK,
zombie drug UK,
xylazine dangers,
xylazine overdose,
xylazine and heroin,
xylazine in cocaine UK,
xylazine public health threat UK,
UK drug warning xylazine,