ஆசிய கோப்பை தொடரில் தேர்வு செய்யப்படாதது ஏன்? மனம் திறந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் தேர்வு செய்யப்படாதது குறித்து இளம் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மனம் திறந்து பேசியுள்ளார்.
கடந்த 2023ம் ஆண்டு தன்னுடைய 23 வயதில் சர்வதேச போட்டியில் அறிமுகமான யஷஸ்வி ஜெய்ஸ்வால் குறுகிய வாய்ப்புகளில் தனது டி20 திறமையை மிகப்பெரிய அளவில் வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் விளையாடிய 23 போட்டிகளில் 5 அரைசதம் மற்றும் ஒரு சதம் உட்பட 723 ஓட்டங்கள் குவித்துள்ளார்.
இருப்பினும் தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடம்பெறவில்லை.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் விளக்கம்
இந்நிலையில் Mashable India- உடனான நேர்காணல் போது ஆசிய கோப்பை தொடரில் தான் தேர்வு செய்யப்படாதது குறித்து மனம் திறந்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் பேசியுள்ளார்.
Yashasvi Jaiswal on not getting selected in the Asia Cup – "It’s in the selectors hands and they go with the team combination they feel is right. I just focus on working on myself. When the time comes, it will come."
— 𝐉𝐨𝐝 𝐈𝐧𝐬𝐚𝐧𝐞 (@jod_insane) September 19, 2025
PERFECT MENTALITY LIKE HIS IDOL ROHIT 🤍 pic.twitter.com/VwRjiWajwc
அதில், நான் அதைப் பற்றி யோசிப்பது இல்லை, அது எல்லாம் தேர்வு குழுவின் கையில் உள்ளது. அணி தேர்வு என்பது வீரர்களின் கலவை பொறுத்து அமையும், என்னை பொறுத்தவரை நான் முடிந்ததை செய்வேன். என்னுடைய நேரம் வரும் போது எல்லாம் சரியாக அமையும், அதுவரை என்னுடைய கடின உழைப்பிலும், என்னை மேம்படுத்தி கொள்வதிலும் கவனம் செலுத்த விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2024ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இந்திய அணியில் இடம் பெற்றிருந்த போதிலும் அவருக்கு விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |