ஐபிஎல் வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த ஜெய்ஸ்வால் - குவியும் வாழ்த்து
ஐபிஎல் வரலாற்றில் மாபெரும் சாதனைப் படைத்த ஜெய்ஸ்வாலுக்கு சமூகவலைத்தளங்களில் கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர்.
மாபெரும் சாதனைப் படைத்த ஜெய்ஸ்வால்
16-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இந்தியாவில் பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
முதலில் துடுப்பாட்டம் செய்த கொல்கத்தா அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ஓட்டங்களை எடுத்திருந்தது. இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 13.1 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 151 ஓட்டங்கள் எடுத்து அபாரமாக வெற்றி பெற்றது.
@ImJaiswal_19
இந்தப் போட்டியில், ராஜஸ்தான் அணி வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் களத்தில் இறங்கியதும் சும்மா மைதானத்தையே அதிர வைத்தார். அடுத்து வந்த பந்துகளை வானத்தில் பறக்க விட்டு ராஜஸ்தான் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
43 பந்துகளில் 98 ஓட்டங்கள் எடுத்து மாஸ் காட்டி, அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்ற அவர், 13 பந்துகளில் 50 ஓட்டங்கள் எடுத்து எதிரணியை திக்குமுக்காட வைத்து விட்டார்.
இதனால், ஐபிஎல் வரலாற்றில் குறைந்த பந்தில் அரைசதம் விளாசிய வீரர் என்ற சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார். தொடக்கத்தில் மிக அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் 13 பந்துகளில் அரைசதம் (50 ரன்கள்) விளாசினார்.
இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் குறைந்த பந்தில் அரைசதம் விளாசிய வீரர் என்ற சாதனையை ஜெய்ஸ்வால் படைத்தார்.
நேற்று நடைபெற்ற போட்டியில் ஜெய்ஸ்வால் ஆட்டத்தைப் பார்த்து யாருப்பா இந்த பையன் என்று அனைவரின் கவனத்தையும் தற்போது தன் பக்கம் ஈர்த்துள்ளார் ஜெய்ஸ்வால்.
இந்தப் போட்டியில் ஜெய்ஸ்வால்தான் ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார். ஐபிஎல் வரலாற்றில் அதிவேகத்தில் அரை சதத்தை யஷஸ்வி ஜெய்ஸ்வால் பதிவு செய்துள்ளார்.
தற்போது, சமூகவலைத்தளங்களில், கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் ஜெய்ஸ்வாலை பாராட்டி வருகின்றனர்.
இதுவரை ஜெய்ஸ்வால் 12 போட்டிகளில் விளையாடியுள்ளார். இப்போட்டிகளில் இவர் 575 ஓட்டங்கள் எடுத்து, அதிக ஓட்டங்கள் குவித்தவர்கள் பட்டியலில் 2-வது இடத்தை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Fastest FIFTY in the IPL
— IndianPremierLeague (@IPL) May 11, 2023
Yashasvi Jaiswal brings up his half-century in just 13 deliveries ??#TATAIPL #KKRvRR pic.twitter.com/KXGhtAP2iy