சேவாக்கின் மகன் அதிரடி: யஷ்பர்தான் அபார சதம்..இந்தியா U19 மிரட்டலான வெற்றி
India u19 beat australia u19 by 103 runs: அவுஸ்திரேலியா U19 அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா U19 அணி 103 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ராஜ்கோட்டில் நடந்த அவுஸ்திரேலியா U19 அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில், இந்தியா U19 அணி 103 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஆர்யவீர் சேவாக் அதிரடி
இந்தியா U19 மற்றும் அவுஸ்திரேலியா U19 அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் நடந்தது.

முதலில் ஆடிய இந்தியா U19 அணியில் லக்ஷயா 11 ஓட்டங்களில் வெளியேற, ஆர்யவீர் சேவாக் அதிரடியாக 47 ஓட்டங்கள் (9 பவுண்டரிகள்) விளாசி ஆட்டமிழந்தார்.
பின்னர் கைகோர்த்த வினீத், யஷ்பர்தான் கூட்டணி 132 ஓட்டங்கள் குவித்தது. வினீத் 87 ஓட்டங்களில் வெளியேற, ஓஜா 20 பந்துகளில் 34 ஓட்டங்கள் விளாசினார்.
சதம் விளாசிய யஷ்பர்தான் சௌஹான் (Yashbardhan Chauhan) 100 பந்துகளில் 2 சிக்ஸர், 15 பவுண்டரிகளுடன் 122 ஓட்டங்கள் விளாசினார்.
இதன்மூலம் இந்தியா U19 அணி 50 ஓவர்களில் 341 ஓட்டங்கள் குவித்தது. தாமஸ் வாசியோ 3 விக்கெட்டுகளும், பேட்ரிக் சல்லிவன் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
