நோபல் பரிசு வென்றவர் தலைமையில் கொதித்தெழுந்த அமெரிக்க யாசிதி மக்கள்: சிக்கலில் பிரஞ்சு நிறுவனம்
ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவளித்ததாக கூறி பிரஞ்சு சிமெண்ட் நிறுவனம் மீது நோபல் பரிசு வென்றவர் தலைமையில் நூற்றுக்கணக்கான அமெரிக்க யாசிதி மக்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
மனித உரிமைகள் சட்டத்தரணி அமல் குளூனி
குறித்த மக்களுக்கு ஆதரவாக பிரபல மனித உரிமைகள் சட்டத்தரணி அமல் குளூனி மற்றும் முன்னாள் மூத்த அமெரிக்க தூதர் லீ வோலோஸ்கி ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.
@reuters
அமைதிக்கான நோபல் பரிசை பகிர்ந்து கொண்ட Nadia Murad தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட யாசிதி மக்கள் அனைவரும் அமெரிக்க குடிமக்கள் என்றே கூறப்படுகிறது.
2014ல் வடக்கு ஈராக்கில் யாசிதிகளின் பிறப்பிடமான சின்ஜார் பகுதியை ஐ.எஸ் தீவிரவாதிகள் குறிவைத்தபோது அந்தக் கொடூர வன்முறையில் இருந்து தப்பியவர்களே தற்போது அமெரிக்காவில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நியூயார்க்கில் உள்ள பெடரல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் படி பிரஞ்சு சிமெண்ட் நிறுவனமான Lafarge, உலக நாடுகளில் தீவிரவாத செயல்களை முன்னெடுத்த ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு உதவியதாகவும், இதனால் அந்த தாக்குதல்களில் உயிர் தப்பியவர்களுக்கு Lafarge நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
778 மில்லியன் டொலர்கள் தொகை
மேலும், அமெரிக்காவால் தீவிரவாதிகள் என அடையாளப்படுத்தப்பட்ட குழுக்களுக்கு நிதியுதவி அளித்த குற்றச்சாட்டில் ஏற்கனவே Lafarge நிறுவனம் குற்றவாளி என்று அமெரிக்க நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
@reuters
இது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்துள்ளது. ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளிப்பதால், சிரியாவில் அவர்கள் தடையின்றி செயல்பட முடியும் என நம்பியுள்ளனர்.
இதனையடுத்து Lafarge நிறுவனம் ஒப்பந்தத்தின் ஒருபகுதியாக 778 மில்லியன் டொலர்கள் தொகையை அளிக்க ஒப்புக்கொண்டது. ஐ.எஸ் தீவிரவாதிகள் கிறிஸ்தவர்கள், யாசிதிகள் மற்றும் ஷியா முஸ்லிம்களுக்கு எதிராக இனப்படுகொலையை முன்னெடுத்ததாக 2016ல் அமெரிக்கா முடிவுக்கு வந்தது.
ஐ.நா மன்றம் முன்னெடுத்த விசாரணையில் சிரியா மற்றும் ஈராக்கில் கொலை, வன்கொடுமை அடிமைத்தனம் மற்றும் பிற குற்றங்கள் மூலம் 400,000 யாசிதி மக்கள் ஐ.எஸ் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதும் அம்பலமானது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |