ஒரே நாளில் கொல்லப்பட்ட 512 ஹவுதி படையினர்: ஏமன் ராணுவம் நடத்திய 780 தாக்குதல்கள்
Yemen army strikes houthi forces 512 killed: ஏமன் ராணுவம் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கான ஹவுதி படையினர் கொல்லப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொல்லப்பட்ட நுற்றுக்கணக்கான ஹவுதிகள்
ஏமன் நாட்டில் அரசு படையினருக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படைக்கும் இடையே தீவிரமான மோதல் வெடித்துள்ளது.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஹவுதி படையினரின் நிலைகளை குறிவைத்து ஏமன் அரசு ராணுவம் 780 வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
முதற்கட்ட தகவல் படி இந்த தாக்குதலில் கிட்டத்தட்ட 512 ஹவுதி போராளிகளும், அதன் தளபதிகளும் கொல்லப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏமன் அரசு ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் மஜித் அப்துல்லா அல் நுசைலி இந்த தகவலை சமூக வலைத்தளம் வழியாக உறுதிப்படுத்தியுள்ளார்.
ஏமன் அரசின் இந்த தாக்குதலில் 330 க்கும் மேற்பட்ட ஹவுதி வாகனங்களும், ராணுவப் போர் கருவிகளும் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலை தொடர்ந்து கூடுதல் விழிப்புடன் இருப்பதாகவும், ஹவுதிகள் அணிதிரட்டல் முயற்சிகள் மற்றும் நடமாட்டங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மஜித் அப்துல்லா அல் நுசைலி தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுக்கும், சர்வதேச மனிதநேய சட்டத்திற்கு உட்பட்டும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த நேரத்தில் எதிரிகளின் எத்தகைய எதிர் தாக்குதல்களையும் சமாளிக்க தயாராக இருப்பதாகவும் மஜித் அப்துல்லா அல் நுசைலி தெரிவித்துள்ளார்.