ஈரான் போரில் இஸ்ரேலுக்கு எதிராக களமிறங்கிய மத்திய கிழக்கு நாடொன்று
ஈரான் மீதான போர் தொடங்கியதில் இருந்து முதல் முறையாக மத்திய கிழக்கு நாடான ஏமனில் இருந்து ஏவுகணைத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஈரான் ஆதரவு ஹவுதிகள்
ஏமனிலிருந்து ஏவுகணை ஏவப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் சனிக்கிழமை அதிகாலையில் உறுதி செய்துள்ளது.

ஈரானுக்கு எதிரான போர் தீவிரமடைந்தால் நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாக ஈரான் ஆதரவு ஹவுதிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்த சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த ஏவுகணைத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஹவுதிகள் தரப்பில் இருந்து எந்த வகையான நடவடிக்கை இருக்கும் என அவர்கள் குறிப்பிடாத நிலையில், தற்போது ஏவுகணைத் தாக்குதல் நடந்துள்ளது.
ஈரான் போரில் ஹவுதிகள் நுழைந்துள்ளது, மிக மோசமான பிராந்திய மோதலுக்கான வாய்ப்புகளை அதிகரித்துள்ளதாகவே கூறுகின்றனர்.
தவறான முடிவாக மாற
குறிப்பாக, ஏமனுக்கு அப்பால் வெகு தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கும் அவர்களின் திறனையும், அரேபியத் தீபகற்பம் மற்றும் செங்கடலைச் சுற்றியுள்ள கப்பல் போக்குவரத்துப் பாதைகளைச் சீர்குலைக்கும் திறனையும் ஹவுதிகள் கொண்டிருப்பதைக் கருத்தில் கொள்ளும்போது ஈரான் போர் இன்னொரு கட்டத்திற்கு நகர்வதாகவே கூறுகின்றனர்.

மேலும், கார்க் தீவை இலக்கு வைத்து அமெரிக்க இராணுவம் உள்ளே நுழையும் என்றால், ஹவுதிகள் மிக மோசமான பதிலடி அளிப்பார்கள் என்றே அஞ்சப்படுகிறது.
மட்டுமின்றி ஈரானுக்கு ஆதரவாக லெபனானும் ஈராக்கும் ஏற்கனவே போரில் களமிறங்கியுள்ளதாக மேற்கத்திய ஊடகங்கள் தகவல் வெளியிடும் நிலையில், ஈரானுக்குள் படையெடுப்பு என்பது ட்ரம்ப் நிர்வாகத்தின் தவறான முடிவாக மாறக் கூடும் என்றே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |