இஸ்ரேலுக்கு எதிராக.... ஏமனின் ஹவுதிகள் வெளியிட்ட புதிய அறிவிப்பு
காஸா போர் நிறுத்தத்தை ஆதரிக்கும் வகையில், இனி இஸ்ரேல் மீதும் கருங்கடல் கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்துவதில்லை என ஏமனின் ஹவுதிகள் அறிவித்துள்ளனர்.
சியோனிச அமைப்பின்
ஹமாஸ் படைகளின் கஸ்ஸாம் பிரிவு திங்களன்று வெளியிட்டுள்ள கடிதம் ஒன்றில், ஹவுதிகளின் முடிவு குறிப்பிடப்பட்டுள்ளது. மட்டுமின்றி, போர் நிறுத்தம் தொடர்பான நகர்வுகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும்,

எதிரி காஸா மீது மீண்டும் ஆக்கிரமிப்பைத் தொடங்கினால், சியோனிச அமைப்பின் வேர்களை அறுக்கும் வகையில் இராணுவ நடவடிக்கைகளுக்கு நாங்கள் திரும்புவோம் என்றும் ஹவுதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், கருங்கடல் மற்றும் அரபிக் கடல்களில் இஸ்ரேலிய கப்பல் போக்குவரத்து மீதான தடையை மீண்டும் கொண்டு வருவோம் என மிரட்டல் விடுத்துள்ளனர்.
சர்வதேச கவனம்
ஹவுதிகள் தங்கள் பிராந்தியத்தில் தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு எந்த முறையான ஒப்புதலையும் வழங்கவில்லை. இஸ்ரேல்-காஸா போரின் போது கப்பல் போக்குவரத்து மற்றும் இஸ்ரேல் மீதான தாக்குதல்கள் மூலம் ஹவுதிகள் சர்வதேச கவனம் பெற்றனர்.

காஸா மீதான தாக்குதலை இஸ்ரேல் கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை ஹவுதிகள் அப்போது முன்வைத்தனர். இந்த நிலையில், தற்போது அக்டோபர் 10 ஆம் திகதி போர் நிறுத்தம் ஏற்பட்டதன் பின்னர் ஹவுதிகள் தாக்குதல் முன்னெடுத்ததாக தகவல் ஏதும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |