தமிழகத்தை அதிரவைத்த பள்ளி ஆசிரியரின் பாலியல் தொல்லை விவகாரம்! குறித்த பள்ளியுடன் பிரபல நடிகர் ஒய்.ஜி மகேந்திரனுக்கு என்ன தொடர்பு?
மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக கைதான சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
சென்னை கே.கே நகரில் அமைந்துள்ள பத்ம சேஷாத்ரி பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் ராஜகோபாலன்.
இவர் மாணவிகளுக்கு பல ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் நேற்று கைது செய்யப்பட்டார்.
அதன்படி கடந்த 5 ஆண்டுகளாக 11,12ஆம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டது அம்பலமானது, மாணவிகளின் வாட்ஸ் ஆப் மூலம் சாட் செய்து பாலியல் தொந்தரவு அளித்ததாக வாக்குமூலமும் ராஜகோபாலன் அளித்துள்ளார்.
மேலும் ஓன்லைன் வகுப்பின் போது குளியலறையில் இருந்து வெளியில் வந்து வெறும் துண்டு மட்டும் உடலின் மேல் பகுதியில் உடுத்தி கொண்டு உட்கார்ந்து மாணவிகள் முன்னால் அவர் உட்கார்ந்திருந்தார் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.
ராஜகோபாலனின் இந்த செயல் தமிழகம் மூலம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக கைதான சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது 5 பிரிவுகளின் கீழ் பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பாலியல் புகாரில் சிக்கிய ஆசிரியர் ராஜகோபாலனை சென்னை அசோக்நகர் மகளிர் போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில், பாலியல் தொல்லை கொடுத்ததை ஒப்புக்கொண்டதால், போக்சோ உள்ளிட்ட 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் ராஜகோபாலனை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் போலீசார் ஆஜர்படுத்தியுள்ளனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்படுவார்.
பத்ம சேஷாத்ரி பள்ளிக்கூடத்தின் நிறுவனர் பிரபல திரைப்பட நடிகர் ஒய்.ஜி மகேந்திரனின் தாயார் ஆவார்.
அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார், இதனால் இது தொடர்பில் ஒய்.ஜி மகேந்திரனிடமும் விசாரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இது தொடர்பில் பேசிய நடிகர் ஒய்.ஜி மகேந்திரன், பத்மா சேஷாத்திரி பள்ளியை நானும் எனது மகள் மதுவந்தியோ நடத்தவில்லை.
நான் அந்த பள்ளியில் ஒரு டிரஸ்டி மட்டும்தான் என்றும் இந்த பள்ளியை எனது தம்பி மற்றும் தம்பியின் மனைவியும் தான் நடத்தி வருகின்றனர் என்றும் கூறியுள்ளார்.
மேலும் இந்த புகாரை பார்த்ததுமே இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என பள்ளிக்கு கடிதம் எழுதி இருக்கிறேன் என்றும் ஆசிரியர் உண்மையில் குற்றவாளி என்றால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.