மாதவிடாய் வலியை குறைக்க வேண்டுமா? இந்த யோகாசனங்கள் மறக்கமால் செய்து பாருங்க!
பெண்கள் மாதவிடாய் காலத்தில் சந்திக்கும் உபாதையில் முக்கியமானது வயிறுவலி.
தற்போது வயிறுவலி உபாதை தாங்காமல் பலரும் மாத்திரைகளை எடுத்துவருவதும் உண்டு.ஆனால் மாதவிடாய் கால வயிறுவலிக்கு மாத்திரை எடுத்துகொள்வதை தவிர்க்க வேண்டும்.
இது பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். எனவே இவற்றை குறைக்க ஒரு சில யோகசானங்கள் உதவுகின்றது. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
பாலாசனா
இது அமர்ந்த நிலையில் செய்யக்கூடிய எளிமையான ஆசனங்களில் ஒன்று. பாலாசனா என்பது குழந்தைகள் இரண்டு கால்களையும் மண்டியிட்டு அமரும் நிலையைக் குறிக்கிறது.
இந்த ஆசனம் செய்வதற்கு, முதலில் தரையில் மண்டியிட்டு அமருங்கள். உங்கள் முழங்காலிலிருந்து, கணுக்கால் வரையிலான பகுதி, தரையில் இருக்குமாறு அமர்ந்து கொள்ள வேண்டும்.
பின்னர், உங்கள் குதிகாலின் மீது அமர்ந்து கொள்ளுங்கள். மெதுவாக மூச்சை வெளியேற்றி, இரண்டு கைகளையும் முன்புறமாக நீட்டவும். உங்கள் உடலை இடுப்புப் பகுதியில் இருந்து ஸ்ட்ரெட்ச் செய்து முன்புறமாக செல்லவும்.
வயிற்றுப் பகுதி உங்கள் தொடைகளுக்கு மேல் இருக்குமாறும், தலை தரையில் இருக்கும் வகையிலும், கைகள் முன்புறம் ஸ்ட்ரெட்ச் செய்தவாறும் இருக்க வேண்டும். மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே உடலை பழைய நிலைக்குக் கொண்டுவரவும். 15 வினாடிகள் முத்தம் 30 வினாடிகள் வரை இந்த நிலையில் இருப்பது நல்லது. நாளொன்றுக்கு, குறைந்த பட்சம் 10 முறை இந்த பயிற்சியில் ஈடுபடுங்கள்.
பத்த கோனாசனா
இந்த ஆசனமும் அமர்ந்த நிலையிலேயே செய்யக்கூடிய எளிமையான யோகாசனம் ஆகும். முதலில் தரையில் அமர்ந்து கொண்டு, உங்கள் இரண்டு கால்களையும் முன்புறமாக நீட்டிக்கொள்ளுங்கள். இரண்டு கால்களையும் மடக்கி, முழங்கால்களுக்கு நடுவில் பாதங்களை வைத்துக்கொள்ளுங்கள். கால்விரல்களை உங்கள் கைகளால் பிடித்தவாறு, உங்களுடைய குதிகால்களை உங்கள் பெல்விஸ் பகுதிக்கு அருகில் கொண்டு வர முயற்சி செய்யுங்கள்.
அடுத்ததாக, நன்றாக மூச்சை இழுத்து, உடலை ரிலாக்ஸ் செய்யுங்கள். மூச்சை வெளியேற்றிக்கொண்டே, இரண்டு மூட்டுகளையும் தரையில் படுமாறு மெதுவாக உடலை முன்புறமாக வளையுங்கள். உங்களால் முடிந்த அளவுக்கு உடலை ஸ்ட்ரெட்ச் செய்தால் போதும். இந்த ஆசனம், உங்கள் இடுப்பு, தண்டுவடம், தொடை மற்றும் கணுக்கால் தசைகளுக்கு வலுசேர்க்கும்.
உத்தாசனா
இந்த ஆசனம், நின்று கொண்டே செய்யும் ஆசனங்களில் ஒன்றாகும். நமக்குத் தெரியாமலேயே இந்த ஆசனத்தை தினமும் செய்து கொண்டு தான் இருக்கிறோம். ஆனால், முறையாக செய்தால், உடல் நன்றாக வளைந்து கொடுக்கும் தன்மையை பெறும், தசைகள் வலுவடைந்து மாதவிடாய் வலியை குறைக்க உதவும். முதலில், நீங்கள் உடலை நேராக வைத்து நின்று கொள்ளுங்கள்.
உங்கள் கைகளை இடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள், மூச்சை நன்றாக உள்ளிழுத்துக்கொண்டே, இடுப்பு மற்றும் தண்டுவடம் பகுதிகளை ஸ்ட்ரெட்ச் செய்து உங்கள் கைகளை தலைக்கு மேலே நீட்டவும்.
மூச்சை வெளியேற்றியவாறு, முன்புறமாக குனியுங்கள். உங்கள் மார்புப்பகுதி, கால்களுக்கு அருகில் வரும்படி குனிய வேண்டும். இரண்டு கைகளையும், உங்கள் இரண்டு பாதங்களுக்கு பக்கத்தில், தரையில் ஊன்றிய நிலையில் வைக்கவும்.
சில நொடிகள் இந்த நிலையில் நீடித்து இருக்கவும். இடுப்புப் பகுதியில் இருந்து நேராக நீங்கள் குனிந்த படியே இந்த பயிற்சி செய்வதால், உடல் வளைந்து குனியும் போது, அல்லது நேராக நிமிரும் போது, அவசரப்பட வேண்டாம்.
விபரீத கரணி
வடமொழியில் "விபரீத" என்றால் தலைகீழ் என்று பொருள். கரணி என்றால் செயல். இந்த ஆசனத்தில் உடல் தலைகீழ் நிலையில் இருக்கும். விபரீத கரணி என்பது படுத்துக்கொண்டே செய்யும் ஒரு எளிமையான யோகாசனம். உங்கள் முதுகு மற்றும் இடுப்புப் பகுதியை வலுவாக்கி, மாதவிடாய் காலத்தில் வலியைக் குறைக்க முடியும். சுவருக்கு அருகில் தரையில் அமர்ந்து கொள்ளவும்.
தரையில் படுத்துக்கொண்டு, கால்களை சுவர்களில் படுமாறு, 90 டிகிரிக்கு நீட்டவும். இடுப்புப் பகுதி வரை தரையில் இருக்க வேண்டும்.
பிறகு, கண்களை மூடிக்கொண்டு 10 முதல் 15 நிமிடங்கள் வரை அதே நிலையி இருக்க முயற்சி செய்யுங்கள்.