கழுத்து வலியால் அவஸ்தையா? இதனை போக்க இந்த 5 யோகா பயிற்சிகள் மறக்காமல் செய்திடுங்க
பொதுவாக நாம் அடிக்கடி சந்திக்கும் ஒரு பிரச்சினைகளில் ஒன்று தான் கழுத்து வலி.
இது நீண்ட நேரம் கணினியில் வேலை செய்வது, போன் பயன்படுத்துவது, சீரற்ற முறையில் தூங்குவது போன்ற காரணங்களால் கழுத்து வலி ஏற்படுகிறது.
பல மணி நேரங்கள் உட்கார்ந்து வேலை செய்வதால் மட்டுமின்றி, அதிகப்படியான மன அழுத்தமும் கழுத்து வலியை ஏற்படுத்தும்.
எனவே இவற்றில் இருந்து விடுபட சில யோகாசன பயிற்சிகள் பெரிதும் உதவுகின்றது. தற்போது அவற்றை பார்ப்போம்.
ஸ்டெர்சஸ் பயிற்சி
முதுகுத்தண்டு நிமிர்ந்து, கால்கள் தரையில் படும்படி நாற்காலியில் அமர்ந்து, இரு கைகளையும் கோர்த்து கொள்ளவும். கட்டை விரல்களை தாடையின் அடியில் வைக்க வேண்டும். தாடையில் கை வைத்தபடியே கழுத்தை மெதுவாக மேலே தூக்க வேண்டும். பிறகு, பழைய நிலைக்கு வர வேண்டும்.
ஜாயிண்ட் பயிற்சி
தோள்பட்டைகளின் இயக்கம் மற்றும் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தும் வகையில் பயிற்சி செய்வது கழுத்து வலியை குறைக்கும். இரண்டு கைகளையும் தோள்பட்டையில் வைத்து கடிகார திசையில் மற்றும் எதிர் திசையில் சுற்ற வேண்டும். இதனை 5-10 நிமிடங்கள் தொடர்ந்து செய்து வந்தால் கழுத்து வலி நீங்கும்.
பேக்பெண்ட்
தரையில் நேராகப் படுத்துக் கொள்ளவும். கழுத்து, முதுகு நேராக இருக்கட்டும். கால்கள் சற்றே விலகி இருக்கட்டும். உள்ளங்கைகள் வானத்தைப் பார்த்தபடி, கைகள் பக்க வாட்டில் இருக்கட்டும். அனைத்து யோகா தோற்ற நிலைகளிலும் இறுதியாகச் செய்யப்பட வேண்டியது. இந்த நிலையில் ஐந்து நிமிடங்களாவது இருக்க வேண்டும். பின்னர் இயல்பு நிலைக்கு திரும்புங்கள். இந்த யோகா ஆசனங்களின் மூலம் உங்கள் கழுத்து வலிக்கு நிவாரணம் பெறலாம்.
கழுத்து ஸ்டெர்சஸ்
கழுத்தை இருபுறமும் அசைக்க வேண்டும். முதலில் நேராக அமர்ந்து வலது பக்கம் கழுத்தை வளைத்து, மெதுவாக மூச்சு விடுங்கள். பின்னர் கழுத்தை நேராக வைத்து தொடர்ந்து இடது பக்கம் சாய்த்து மூச்சு விடுங்கள். பின்னர் நேரான நிலைக்கு வாருங்கள். இதனை தொடர்ந்து 5 நிமிடங்கள் செய்து வந்தால் கழுத்து வலி குறையும்.
கழுத்து பயிற்சி
உங்கள் உள்ளங்கையை தலைக்கு பின்னால் வைத்து, கைகளை முன்னோக்கி தள்ளுங்கள். இப்போது உங்கள் தலை லேசாக பின்னால் சாயும் நிலையில் இருக்கும். தொடர்ந்து 5 - 10 நிமிடங்கள் அப்படியே இருந்துவிட்டு பின்னர் மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்பவும்.