இடுப்பு சதையை எளிய முறையில் குறைக்கனுமா? இந்த 5 பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால் போதும்!

Exercise Yoga Leg Practice
By Kishanthini Aug 20, 2021 02:00 PM GMT
Report

  இடுப்பு பகுதியில் உள்ள தேவையற்ற சதைகளை குறைக்க பயனுள்ள யோகா போஸ்கள் பல உள்ளன. அதில் சில யோகா ஆசனங்களை எப்படி செய்யலாம் என்பதை பற்றி இங்கே பார்ப்போம்.

திரிகோணாசனம் 

இடுப்பு சதையை எளிய முறையில் குறைக்கனுமா? இந்த 5 பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால் போதும்! | Yoga Poses For Getting Small Waist

  •  உங்கள் யோகா மேட்டில் நேராக நின்று, உங்கள் கால்களை அகலமாக விரிக்கவும்.பின்னர் உங்கள் வலது பாதத்தை 90 டிகிரி மற்றும் இடது பாதத்தை 15 டிகிரி அளவுக்கு திருப்பவும்.

  • உங்கள் வலது குதிகாலின் மையத்தை இடது பாதத்தின் வளைவின் மையத்துடன் ஒழுங்கமையுங்கள். உங்கள் கால்கள் தரையை அழுத்துவதையும், உங்கள் உடலின் எடை உங்கள் கால்களில் சமமாக சமநிலைப்படுத்தப்படுவதையும் உறுதி செய்து கொள்ளுங்கள்.

  • மூச்சை ஆழமாக உள்ளிழுக்கவும், மூச்சை வெளியே விடும்போது, உங்கள் கால்களை அசைக்காமல் இடுப்புக்கு கீழே, வலதுபுறம் உங்கள் உடலை வளைக்க வேண்டும்.

  • இடுப்பை நேராக வைத்திருங்கள், உங்கள் இடது கையை மேல் நோக்கி தூக்குங்கள், அதே நேரத்தில் உங்கள் வலது கை தரையில் ஊனி இருக்க வேண்டும். உங்கள் கைகள் நேர்கோட்டில் இருப்பதை உறுதி செய்யவும். மீண்டும் தொடக்க நிலையில் வந்து இடது பக்கத்தில் அதே முறையில் மீண்டும் செய்யவும். 

 பரிவிருத்த சுகாசனம்

இடுப்பு சதையை எளிய முறையில் குறைக்கனுமா? இந்த 5 பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால் போதும்! | Yoga Poses For Getting Small Waist

  •  முன் கால்களை நீட்டி தரையில் உட்கார வேண்டும். கால்களை மடித்து, கால் இரண்டையும் நிலையை க்ராஸ் டு வடிவத்தில் வைக்க வேண்டும். முதுகெலும்பு மற்றும் முதுகை நேராக நிமிர்த்தி, உட்கார்ந்து சாதாரணமாக சுவாசிக்கவும்.

  • உங்களுக்கு சரியான நிலை கிடைத்ததும், வலது உள்ளங்கையை இடுப்புக்கு அருகில் வலது புறம் வைத்து, விரலை வெளிப்புறமாக சுட்டிக்காட்டவும். படிப்படியாக, மூச்சை வெளியேற்றத் தொடங்கி, மேற்புற உடலை கழுத்துடன் வலது புறம் திருப்பவும்.

  • அதே நேரத்தில், இடது கையை வலது முழங்காலை நோக்கி நகர்த்த வேண்டும். உங்கள் உடலை வலது புறம் திருப்பும்போது மூச்சை வெளியே விட வேண்டும். நீங்கள் கழுத்தைத் திருப்பி தோள் பகுதியை திரும்பிப் பார்க்கலாம்.

  • உங்களுக்கு வசதியாக இருக்கும் வரை இந்த நிலையை மேற்கொள்ளவும், மெதுவாக அதே நிலையில் திரும்பி, இடது பக்கத்தில் அதே மாதிரி மீண்டும் செய்யவும்.

 நவாசனம் 

இடுப்பு சதையை எளிய முறையில் குறைக்கனுமா? இந்த 5 பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால் போதும்! | Yoga Poses For Getting Small Waist

  •    உங்கள் முன் கால்களை நீட்டி தரையில் உட்காருங்கள். உங்கள் கைகளை தரையில் அழுத்தி, உங்கள் இடுப்புக்கு சற்று பின்னால், கால்களை விரல்கள் நோக்கி சுட்டிக்காட்டி கைகளை வலுப்படுத்த வேண்டும்.

  • சிறிது பின்னால் சாய்ந்து உட்காருங்கள். உங்கள் முதுகு நேராக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். உங்கள் உடல் முன்பகுதியை நீட்டிக்க தொடர்ந்து செய்யுங்கள்.

  • மூச்சை வெளியே விட்டு, முழங்கால்களை ஒன்றாக வளைத்து, பின்னர் உங்கள் கால்களை தரையில் இருந்து உயர்த்த வேண்டும். உங்களால் நன்றாக சமநிலைப்படுத்த முடிந்தால், உங்கள் முழங்காலை படிப்படியாக நேராக்க முயற்சி செய்யுங்கள்.

  • உங்கள் கைகளை கால்களுடன் சேர்த்து, ஒன்றுக்கொன்று மற்றும் தரைக்கு இணையாக நீட்டவும். படிப்படியாக தொடக்க நிலைக்கு திரும்பி வந்து, இந்த செயல்முறையை மீண்டும் செய்யவும். 

   தனுராசனம்

இடுப்பு சதையை எளிய முறையில் குறைக்கனுமா? இந்த 5 பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால் போதும்! | Yoga Poses For Getting Small Waist

  • உங்கள் கால்களை அகலமாகவும், உங்கள் கைகளை உங்கள் உடலின் பக்கவாட்டில் இருக்குமாறு வைத்து உங்கள் வயிற்றை அடிப்படையாக கொண்டு படுத்துக் கொள்ளுங்கள். அடுத்து முழங்கால்களை மடித்து, கைகளை பின்னோக்கி எடுத்து, கணுக்கால்களைப் பிடித்துக் கொள்ளுங்கள்.

  • மூச்சை உள் இழுத்து, உங்கள் மார்பை தரையில் இருந்து சிறிது தூக்கி, உங்கள் கால்களை மேலும் கீழும் இழுக்க வேண்டும். இப்போது நேராக மேலே பாருங்கள். உங்கள் சுவாசத்தில் கவனம் செலுத்தும் போது போஸ் நிலையாக இருக்க வேண்டும். உங்கள் உடல் இப்போது வில் வடிவ தோரணையில் இருக்கும்.

  • நீங்கள் தொடர்ந்து இந்த நிலையில் இருந்தால், நீண்ட ஆழமான மூச்சை எடுத்துக் கொள்ளுங்கள். தொடக்க நிலைக்கு மெதுவாக திரும்பி வாருங்கள். ஓய்வு எடுத்து மீண்டும் செய்யவும். 

  வீரபத்ராசனம் 

இடுப்பு சதையை எளிய முறையில் குறைக்கனுமா? இந்த 5 பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால் போதும்! | Yoga Poses For Getting Small Waist

  •  குறைந்தபட்சம் 3-4 அடி தூரத்துடன் உங்கள் கால்களை அகலமாக அகற்றி நேராக நிற்க வேண்டும். உங்கள் வலது பாதத்தை 90 டிகிரி மற்றும் இடது பாதத்தை 15 டிகிரி அளவுக்கு திருப்பவும்.

  • இரண்டு கைகளையும் பக்கவாட்டில் தூக்கி, தரைக்கு இணையாக நிலைநிறுத்த வேண்டும். மூச்சை வெளியே இழுத்து, உங்கள் வலது முழங்காலை வளைக்க வேண்டும்.

  • இப்போது உங்கள் தலையைத் திருப்பி உங்கள் வலது புறம் பாருங்கள். பிறகு உங்கள் கைகளை மேலும் நீட்ட வேண்டும்.தொடக்க நிலைக்கு மெதுவாக திரும்பி வாருங்கள். ஓய்வு எடுத்து மீண்டும் செய்யவும்.

  • போஸ்களை குறைந்தபட்சம் 30 விநாடிகளாவது செய்ய வேண்டும் மற்றும் போக போக நேரத்தை 60 விநாடிகளில் இருந்து 90 விநாடிகளாக அதிகரிக்க வேண்டும். இந்த போஸ்கள் உங்கள் இடுப்பு ஒல்லியாக மாற உதவதோடு மட்டுமல்லாமல், உங்கள் மையத்தை வலுப்படுத்தவும், மிகவும் நெகிழ்வானதாக மாற்றவும் உதவும்.
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அகாலமரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US