இரவில் தூக்கம் வராமல் சிரமப்படுறீங்களா? இந்த பயிற்சிகளை தினமும் செய்தாலே போதும்
பொதுவாக தூக்கம் ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியமானது. அதிகபட்சமாக 8 மணி நேரம் தூக்கம் ஒருவருக்கு சிறந்தது என்று கூறப்படுகின்றது.
ஆனால் பலர் தூக்கமில்லாத இரவுகளை கழிக்கிறார்கள். இது உடலுக்கு பல ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதாக அமைகின்றது.
எனவே நல்ல தூக்கம் ஒரு வேண்டுமாயின் ஒரு சில யோகாசனங்களை செய்து வந்தால் போதும்.
தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம். சுகாசனம்
சுகாசனம்
தரையில் நேராக அமர்ந்து கொள்ளுங்கள்
உங்களின் இரு கால்களையும் நீட்டவும். உங்கள் கால்களை ஒன்றன்மேல் ஒன்றாகக் வைக்கவும்
உங்கள் உள்ளங்கைகளை முழங்கால்களில் வைக்கவும். முதுகெலும்பை நேராக வைத்து நிமிர்ந்து உட்கார்ந்து கொள்ளுங்கள்
வஜ்ராசனம்
உங்கள் முழங்கால்களை மடக்கி மெதுவாக அதன் மீது உட்காரவும்.
உங்கள் இடுப்பை உங்கள் குதிகால் மீது வைக்கவும்
உங்கள் குதிகால் ஒன்றுக்கொன்று நெருக்கமாக இருப்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்
முழங்கால் முட்டிகள் மீது உங்கள் உள்ளங்கைகளை வைக்கவும். உங்கள் முதுகை நேராக்கி உட்காருங்கள்
தியானம்
சுகாசனம் போன்ற வசதியான தோரணையில் உட்கார்ந்து கொள்ளுங்கள்
5 விநாடிகளுக்கு முன்புறத்தையும், மற்றொரு 5 விநாடிகளுக்கு பின்புறத்தையும், வலது மற்றும் இடது பக்கங்களில் தலா 5 விநாடிகளும் பாருங்கள்
கண்களை மூடிக்கொண்டு உங்களால் முடிந்தவரை ஏற்கனவே நடந்த விஷயங்களை நினைவு கூருங்கள்
இது உங்களிடம் அமைதியான உணர்வைத் தூண்டக்கூடும். இது ஒரு நல்ல இரவு ஓய்வை அனுபவிக்க உதவுகிறது.