மூன்றே நாளில் முகப்பொலிவை அதிகரிக்க வேண்டுமா? தயிருடன் இந்த ஒரு பொருள் போதும்
பெண்கள் அனைவரும் முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ள தான் நினைப்பார்கள்.
ஆனால் முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.
அந்தவகையில், வீட்டிலிருந்தபடியே சரும பிரச்சனைகள் நீங்கி, முகப்பொலிவை அதிகரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- தயிர்- 2 ஸ்பூன்
- தேன்- 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் தயிர் மற்றும் தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.
பின் இந்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் தடவவும்.
அடுத்து இதனை 15-20 நிமிடங்கள் அப்படியே விட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
2. தேவையான பொருட்கள்
- தயிர்- 2 ஸ்பூன்
- கடலை மாவு- 1 ஸ்பூன்
- மஞ்சள்தூள்- ஒரு சிட்டிகை
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் தயிர், கடலை மாவு, மஞ்சள் சேர்த்து கெட்டியான பேஸ்ட்டை உருவாக்கவும்.
பின் இதனை முகம் மற்றும் கழுத்தில் நன்கு தடவவும்.
அடுத்த அதனை 15-20 நிமிடங்கள் விட்டுவிட்டு தண்ணீரில் கழுவும் போது மெதுவாக ஸ்க்ரப் செய்து கழுவவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |