Yogurt Sweet: ஒரு கப் தயிர் இருந்தால் போதும்.., சூப்பரான ஸ்வீட் ரெடி
தயிர் வைத்து செய்யப்படும் இந்த ஸ்வீட்டை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
வீட்டில் ஃபிரஷ்ஷான தயிர் இருந்தால் இந்த ஸ்வீட்டை ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்கள் சுவையாக இருக்கும்.
இந்த கோடை காலத்திற்கு ஏற்ப குளிர்ச்சியாக சாப்பிடுவதற்கு மிகவும் நன்றாக இருக்கும். இதனை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தயிர்- 2 கப்
- சர்க்கரை- ½ கப்
- பால்- 4 கப்
செய்முறை
முதலில் ஒரு வடிகட்டியில் புளிக்காத கெட்டி தயிர் சேர்த்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு வாணலில் சர்க்கரை சேர்த்து மிதமான தீயில் வைத்து கேரமல் பதம் வரும்வரை கொதிக்க வைக்கவும்.
அடுத்து அதில் பால் சேர்த்து கொதிக்கவைக்கவும். 4 கப் பால் 3 கப் வரும்வரை நன்கு கொதிக்கவைத்து எடுத்து ஆறவைத்துகொள்ளவும்.
இறுதியாக தயிரில் உள்ள நீர் வடிந்ததும் தயிரை வேறொரு பாத்திரத்தில் மாற்றி கிரீம் பதம் வரும்வரை நன்கு கலந்துக்கொள்ளவும்.
கலந்து தயிரில் ஆறவைத்த பால் சேர்த்து கலந்துகொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் மாற்றி 8 மணி நேரம் அப்படியே மூடி போட்டு வைத்து பின் எடுத்து சாப்பிட்டால் சுவையான தயிர் ஸ்வீட் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |