கைது நெருக்கடியில் ஜனாதிபதி... விசாரணைக்கு ஒத்துழைக்கவும் மறுப்பு
தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் ஞாயிற்றுக்கிழமை சட்டத்தரணிகளின் அழைப்பாணைகளுக்கு இணங்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
யூனின் நடவடிக்கை
ஜனாதிபதி யூன் முன்னெடுத்த குறுகிய கால இராணுவச் சட்ட ஆணை தொடர்பில் விசாரிக்கும் சட்டத்தரணிகள் தற்போது மற்றொரு அழைப்பாணையை பிறப்பிக்க திட்டமிட்டுள்ளனர்.
யூன் மற்றும் மூத்த அதிகாரிகள் பலர் கிளர்ச்சி, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தல் மற்றும் மக்கள் தங்கள் உரிமைகளைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் சாத்தியமான குற்றச்சாட்டுகளுக்காக குற்றவியல் விசாரணையை எதிர்கொள்கின்றனர்.
நாட்டு மக்கள் மீது இராணுவச் சட்டத்தைத் திணிக்க முயன்று தோல்வி கண்ட யூனின் நடவடிக்கைகளை விசாரிக்கும் சிறப்பு சட்டத்தரணிகள் குழு புதன்கிழமை யூனுக்கு அழைப்பாணை அனுப்பியது.
ஞாயிரன்று பகல் 10 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர். ஆனால், ஜனாதிபதி யூன் அந்த அழைப்பாணையை நிராகரித்துள்ளார் என்றே கூறப்படுகிறது.
கைது செய்யுமாறு
இந்த நிலையில் திங்களன்று மீண்டும் இன்னொரு அழைப்பாணையை வெளியிட அதிகாரிகள் தரப்பு தயாராகி வருவதாக கூறப்படுகிறது. சனிக்கிழமையன்று ஜனாதிபதி யூன் இராணுவச் சட்ட ஆணையின் மீது குற்றஞ்சாட்டப்பட்டார்.
அத்துடன் அவரது ஜனாதிபதி கடமைகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டார். இதனிடையே, இராணுவ சிறப்புப் போர்க் கட்டளைத் தலைவர் மற்றும் தலைநகர் பாதுகாப்புக் கட்டளைத் தலைவர் உட்பட மூத்த இராணுவ அதிகாரிகளை ஞாயிற்றுக்கிழமை கைது செய்யுமாறு சிறப்பு சட்டத்தரணிகள் கோரியுள்ளனர்.
மட்டுமின்றி, டிசம்பர் 3 அன்று யூன் இராணுவச் சட்டத்தை அறிவித்தபோது சுமார் 1,500 துருப்புக்கள் அணிதிரட்டப்பட்டதாக காவல்துறை கூறியது. இந்த நிலையில் இவர்கள் மீதும் விசாரணை மற்றும் நடவடிக்கைகள் பாயலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |